Baakiyalakshmi : இன்றைய எபிசோடில் ராதிகா கோபியிடம் உங்களை அந்த வீட்டுக்கு அனுப்பி இருக்க கூடாது உங்க அம்மா பாக்கியாவுக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க என்று தெரிந்தும் நான் உங்களை அனுப்புனது தப்பு என்று பேசிக் கொண்டிருக்கிறார். மேலும் ராதிகா பாக்யா எது பண்ண உங்களுக்கு என்ன நீங்கள் ஏன் பாக்கியாவை பற்றி நினைக்கிறீங்க..
என்று கேட்பதற்கு கோபி, பாக்கியா இங்கிலீஷ் கிளாஸ், கேன்டீன் போனா இப்ப காலேஜும் போறா இப்படி எல்லாம் பண்ணி என்ன வில்லன் ஆக்குற அவ மட்டும் ஹீரோவா? முடியாது என்னால என்ன பண்ண முடியுமோ நான் பண்றேன்னு சொல்லிவிட்டு போகிறார். பிறகு ஈஸ்வரியிடம் பாக்யா நீங்க காசிக்கு போன நேரத்தில் ஜெனியோட அம்மா வந்தாங்க அவங்க ஜெனிக்கு எப்ப வளைகாப்பு வைக்கலாம் என கேட்டாங்க..
அத்தை என்று சொல்வதற்கு ராமமூர்த்தி காலண்டர் எடுத்துட்டு வாம்மா நல்ல நாள் பார்க்கலாம் என்று பார்த்துவிட்டு வர வெள்ளிக்கிழமை இல்லாமல் அடுத்த வெள்ளி கிழமை வளைகாப்பு வச்சுக்கலாம் என்று சொல்கிறார் உடனே எல்லோரும் வளைகாப்பை சொந்தக்காரங்களை எல்லாம் கூப்பிட்டு கிராண்டா பண்ணனும் என சொல்கின்றனர்.
ஆனால் ஜெனி மற்றும் செழியன் இருவரும் வீட்டிலே சிம்பிளா வச்சுக்கலாம் என்று சொல்கின்றனர். பிறகு பாக்கியா இங்கிலீஷ் கிளாஸ் முடிந்து பக்கத்தில் இருக்கிற டீ கடையில் லோபிகா மற்றும் பழனிச்சாமியுடன் டீ குடித்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது கோபி அவரது நண்பருடன் அந்த பக்கமாக காரில் சென்று கொண்டிருக்கும் போது நின்று இவர்களை பார்க்கிறார்.
உடனே பாக்யா சிரிச்சு சிரிச்சு அவர்களுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து கோபி டென்சன் ஆகிறார். மேலும் பழனிச்சாமியுடன் பாக்யா பேசிக் கொண்டிருப்பதற்கு கோபி அவரது நண்பரிடம் நக்கல் அடித்து வருகிறார் ஆனால் கோபியின் நண்பரோ கோபி பேசுவதை கேட்டு சிரித்துக் கொண்டிருக்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.