Baakiyalakshmi : இன்றைய எபிசோடில் பாக்கியாவும் ஈஸ்வரியும் கோவில் போயிட்டு வரும் பொழுது இருவரும் பேசிய வீடியோவை பார்த்து பலரும் ஈஸ்வரியை பெருமையாக பேசி வருகின்றனர் அப்பொழுது அந்த பக்கமா போன கோபி காரை நிறுத்தி இவர்களைப் பார்க்கிறார்.
அம்மா இப்படி மாறிட்டாங்களே என்று நினைத்து பின்பு கிளம்பி விட்டார். அடுத்து ராதிகா வீட்டில் அவரின் அம்மா பாக்யா வீட்டில் என்ன விசேஷம் எங்கு பார்த்தாலும் பாக்யா மற்றும் ஈஸ்வரியை பற்றியே பேசிக் கொண்டிருக்கின்றனர் என்று கேட்க இந்த வீடியோவை நீயே பாருமா என்று ராதிகா அவரது அம்மாவிடம் காண்பிக்கிறார்.
அப்பொழுது வீட்டுக்கு வரும் கோபி அந்த வீடியோவை ஏன் பாத்துட்டு இருக்கீங்க. காலையிலிருந்து இதையே கேட்டு எனக்கு காது வலிக்குது என்கிறார் மேலும் கோபி எங்க அம்மா கிட்ட போன்ல பேசுறேன் இத பத்தி என்று சொல்லிவிட்டு ஈஸ்வரிக்கு போன் செய்கிறார் போனில் அம்மா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..
வீட்டுக்கு வெளியே வா என்று கூப்பிடுகிறார். பிறகு கோபி ஈஸ்வரி இடம் இந்த வயசுல பாக்கியாவுக்கு காலேஜ் தேவையா நீ ஏன் அம்மா இதுக்கெல்லாம் சப்போர்ட் பண்ற என்று கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி நீதான் அவளை விவாகரத்து பண்ணிட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டல்ல..
அவ எது பண்ணா உனக்கு என்ன உன்ன கல்யாணம் பண்ணி உன் கூட இருந்தப்ப அவ எந்த ஒரு சந்தோஷத்தையும் அனுபவிக்கல அதனால இனி அவ பண்ற எல்லா விஷயத்துக்கும் நாங்க கூட நிற்போம் என்று மருமகளை விட்டுக் கொடுக்காமல் ஈஸ்வரி கோபி இடம் பேசுகிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.