பாக்கியாவை திட்ட வந்த கோபிக்கு அதிர்ச்சி கொடுத்த பழனிச்சாமி.. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடு

Baakiyalakshmi
Baakiyalakshmi

Baakiyalakshmi : பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் பாக்கியா, எழில், அமிர்தா, ஜெனி போன்றவர்கள் வீட்டில் சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கின்றனர் அப்போது பாக்கியா இனி நான் டெய்லி காலைல உங்கள டீ போட்டு எழுப்ப மாட்டேன். ஏன்னா நான் காலேஜ் போகணும் அதனால நாலு மணிக்கு எழுந்து உங்களுக்கு சமைச்சு வச்சுட்டு..

இங்கிலீஷ் கிளாஸ் போயிட்டு அப்புறம் கேன்டீன் போயிட்டு பிறகு காலேஜ் போகனும் என்று பேசிக் கொண்டிருக்கிறார் உடனே செல்வியும் அங்கு வருகிறார் செல்வி என்னக்கா ஒரே சந்தோஷமா இருக்கீங்க என்று கேட்க எழில் அம்மா காலேஜ் போகப் போறாங்க அதனால தான் ரொம்ப சந்தோஷமா இருக்காங்கன்னு சொல்றாங்க செல்வியும் இதைக் கேட்டு சந்தோஷப்படுறாங்க.

பிறகு பாக்கியா இங்கிலீஷ் கிளாசில் பழனிச்சாமிடம் நான் காலேஜ் சேர்ந்துட்டேன் என சொல்வதற்கு பழனிச்சாமி ரொம்ப சந்தோஷப்படுறாரு.. அப்புறம் பழனிச்சாமி பாக்யா காலேஜ் சேர்ந்த விஷயத்தை கொண்டாடறதுக்காககேக் வாங்கிட்டு வந்து பாக்யாவை கட் பண்ண சொல்றாங்க.. பாக்யாவும் நான் கேக் கட் பண்ணி எல்லாருக்கும் கொடுக்குறாங்க..

இன்னொரு பக்கம் கோபி பாக்கியா காலேஜ் சேர்ந்தத நினைச்சு ரொம்ப டென்ஷன் ஆகி அவரோட ஃப்ரெண்ட் கிட்ட புலம்பிக்கிட்டு இருக்காரு.. பாக்யா காலேஜ் போயிட்டா என் குடும்பத்தை யார் பார்த்துப்பா அவ ரொம்ப ஓவரா போயிட்டு இருக்கா அந்த இடியட்டை நேரா பார்த்து நாலு கேள்வி கேட்கணும்னு..

கோபி இனியாக்கு போன் பண்ணி பாக்யா இங்கிலீஷ் கிளாஸ்ல இருக்காங்க என்ற விஷயத்தை தெரிந்து கொண்டு அங்கு போகிறார்.. இங்கிலீஷ் கிளாசில் பாத்தீங்கன்னா ஒரு ஸ்டூடண்ட் எனக்கு தெரிஞ்ச பொண்ணுக்கு ப்ரபோஸ் பண்ணனும் எப்படி இங்கிலீஷ்ல பேசறதுன்னு டீச்சர் கிட்ட கேக்குறாங்க..

டீச்சர் அவருக்கு யாராவது ப்ரொபோஸ் பண்ணுவது போல் டெமோ காமிங்கனு சொல்றதுக்கு பழனிச்சாமி லோபிகாவை கூப்பிட்டு டெமோ காமிக்கிறாரு.. அது வொர்க் அவுட் ஆகல பின்பு பாக்யாவிடம் ஐ லவ் யூ என பழனிச்சாமி பிரபோஸ் பண்ண போகிறார் அந்த நேரத்தில் பாக்யாவில் முன்னாள் கணவர் கோபியும் அங்கு வருகிறார் இத்துடன் இந்த எபிசோடு முடிவடைந்துள்ளது..