Baakiyalakshmi serial : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில்.. ராதிகா கோபியை சாப்பிட அழைக்கிறார் அப்பொழுது கோபி போன் பேசிக் கொண்டிருக்கிறேன் வரேன் என்று சொல்லிவிட்டு பின்பு சாப்பிட வருகிறார் ஆனால் சாப்பிடும் போதும் கோபியின் கவனம் போனில் இருப்பதை பார்த்து ராதிகா என்ன போனே பாத்துட்டு இருக்கீங்க..
யார்கிட்ட பேசினீங்கன்னு கேட்க என் ஃப்ரெண்ட் அப்ராடில் இருந்து போன் பண்ணான் அவன்கிட்ட இனியாவோட படிப்பு விஷயத்தை பத்தி பேசிகிட்டு இருந்தேன். இந்த பாக்கியா நான் சொன்னதை படிக்க வைக்காம அவ இஷ்டத்துக்கு காலேஜ் செத்துட்டான்னு பாக்யாவை கோபி திட்ட அதுக்கு ராதிகா பாக்யா ஒன்னும் அவங்க இஷ்டத்துக்கு சேக்கல..
இனியா விருப்பப்பட்டதால் தானே சேர்த்தாங்க அப்படின்னு சொல்றாங்க.. அப்புறம் கோபி இனியாவை பார்க்க பாக்கியா வீட்டுக்கு வரார் ஆனா உள்ள வராம வெளியவே நிக்கிறாரு, அதை பார்த்து இனியா உள்ள வாங்க டாடி என கூப்பிடுறாங்க இல்ல வேணாமா உள்ள வந்தா ஏதாவது பிரச்சனையாகும் நம்ப இங்கேயே பேசலாம் நான் உன்கிட்ட பேசணும்னு தான் வந்தேன் அப்படின்னு சொல்லிட்டு பேசிட்டு இருக்காரு கோபி இனியாகிட்ட காலேஜ் போக தேவையான திங்ஸ் எல்லாம் வாங்கிட்டியா..?
வா நாளைக்கு நம்ம ஒரு பெரிய மாலுக்கு போயி உனக்கு தேவையான திங்ஸ் எல்லாம் வாங்கிட்டு வரலாம்னு சொல்ல இனியா நான் அம்மா கூட போய் வாங்கிக்கிறேன் டாடி அப்படின்னு சொல்றாங்க… அப்புறம் இனியா கோபி கிட்ட டாடி அம்மாவும் காலேஜ் சேர்ந்துட்டாங்க என சொல்வதற்கு கோபி என்னது பாக்யா காலேஜ் சேர்ந்துட்டாளா இந்த வயசுல அவல எந்த காலேஜ்ல சேர்த்துக்கிட்டாங்க என கேட்பதற்கு இனியா நான் படிக்கிற அதே காலேஜ்ல தான் டாடி ஈவினிங் கிளாஸ் அம்மா சேர்ந்து இருக்காங்க என சொல்றத கேட்டு கோபி ரொம்ப கடுப்பாகிறார்.
இதற்கு வீட்டில் யாரும் எதுவும் சொல்லவில்லையா தாத்தா ஏதும் சொல்லவில்லையானு கேட்கிறதுக்கு தாத்தா எதுவும் சொல்லல பாட்டிக்கு இது தெரியாதுன்னு இனியா சொல்றாங்க அப்புறம் கோபி நான் ஏதாவது பண்றன்டான்னு சொல்லிட்டு கிளம்புறார். வீட்டுக்கு போன கோபி ராதிகா கிட்ட இத பத்தி சொல்றாரு இதை கேட்ட ராதிகா பாக்யா என்ன புதுமைப்பெண் என்று நெனப்பா கேட்டரிங் பண்றாங்க இங்கிலீஷ் கிளாஸ் போறாங்க..
இதெல்லாம் கூட ஓகே ஆனா காலேஜ் போறதெல்லாம் ரொம்ப ஓவர் பாக்கியாவால் ஒரு வாரம் கூட காலேஜ் தாக்குப் பிடிக்க முடியாது அப்புறம் அவங்களே நின்றுவாங்க என ராதிகா சொல்கிறார்.. அப்புறம் பாக்கியா காலேஜுக்கு என்னென்ன திங்க்ஸ் வாங்க வேண்டும் என்பதை யோசித்து பேப்பரில் எழுதிக் கொண்டிருக்கிறார். மேலும் ஜெனி இடம் நீ காலேஜ் போயிருக்கல காலேஜுக்கு என்ன என்ன வேணும்னு சொல்லு நான் எழுதி வச்சு வாங்கிக்கிறேன்னு கேக்குறாங்க..
இத கேட்டு ராமமூர்த்தி காலேஜுக்கு பேக் பேனா பென்சில் ரப்பர் என சொல்லிக் கொண்டிருக்கும்போதே பாக்கியா இருங்க மாமா நான் எழுதி வச்சுக்கிறேன்னு சொல்றாங்க இதைக் கேட்டு எழிலும் இனியாவும் சிரிச்சுகிட்டு என்னமா இது கூட தெரியாதா என பாக்கியாவை கிண்டல் செய்கின்றனர். எனக்கும் கொஞ்சம் தெரியும் நான் ஒன்னு வாங்கி வச்சிருக்கேன் பாருங்க அப்படின்னு பாக்கியா ஜாமென்ட்ரி பாக்ஸ் எடுத்து காமிக்கிறாங்க..
அந்த ஜாமென்ட்ரி பாக்ஸை பார்த்து எல்லாரும் சிரிக்கிறாங்க இப்பல்லாம் யாருமே காலேஜ்க்கு ஜாமென்ட்ரி பாக்ஸ் எல்லாம் எடுத்துட்டு போறது இல்ல அதெல்லாம் அந்த காலம் இந்த காலத்துல பவுச் தான் வச்சிருப்பாங்கனு இனியா சொல்ல பாக்யா அதையும் எழுதி வச்சிக்கிறாங்க அப்புறம் வாட்டர் பாட்டில், பேக், சேரிக்கு மேட்சிங்கா வளையல் போன்றவை வாங்க வேண்டும் என எழுதி வைத்துக் கொள்கிறார் இதோட இன்றைய எபிசோட் முடிவடைந்துள்ளது.