Baakiyalakshmi september 11 : இன்றைய எபிசோடில் ஈஸ்வரி திரும்ப கிடைச்ச சந்தோஷத்தில் இனியா இருக்கிறார் அப்பொழுது கோபி போன் பண்ணி என்னமா எனக்கு இத்தனை மிஸ்டுகால் கொடுத்திருக்க என்று கேட்க பாட்டி வந்துட்டாங்கப்பா அத சொல்ல தான் போன் பண்ணினேன் என்று சொல்கிறார்.
பிறகு போன உங்க அம்மாகிட்ட கொடு என பாக்யாவிடம் மரியாதையா இன்னைக்கு நைட்டுக்குள்ள என் பொண்ணையும் அம்மாவையும் கூட்டிட்டு வந்து வீட்ல வீடு என கோபி திட்டுகிறார்.. பிறகு கோபி ஈஸ்வரி இடம் பேசும் பொழுது பாக்யா உங்களை கூட்டிட்டு போய் தொலைச்சுட்டா என்ன நெனச்சிட்டு இருக்கா, என பாக்கியவை திட்டுவதற்கு நிறுத்துடா..
எல்லாத்துக்கும் அவளையே குறை சொல்லாத அவளால எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல.. நீ தான் இப்ப பிரச்சனையா மாறிக்கிட்டு இருக்க என மருமகளுக்கு சப்போர்ட்டா கோபி இடம் ஈஸ்வரி பேசுகிறார்.. இதைப் பார்த்த பாக்கியா நீங்களா இப்படி பேசுறீங்க என்று சந்தோஷப்படுகிறார் அடுத்து கேண்டினில் அமிர்தா எல்லோரிடமும் ஒழுங்கா வேலை செய்யுங்க எந்த தப்பும் வந்துட கூடாது என பேசிக் கொண்டிருக்கிறார்.
அங்கு வந்த ராதிகா பாக்யா இல்லனாலும் வேலை நல்லா நடக்குதே, அவங்க எப்ப வருவாங்க, அவங்க இஷ்டத்துக்கு வராங்க லீவு போடுறாங்க என பாக்கியாவை பற்றி பேசுகிறார் பிறகு நிலாவை பார்த்து என்ன குழந்தை எல்லாம் இங்கே கூட்டிட்டு வந்து இருக்கீங்க.. இனிமே இது எல்லாம் நடக்க கூடாது என சொல்ல ராமமூர்த்தி நான் நிலாவை பார்த்துக்கிறேன் நீ வேலைய பாருமா என்று சொல்கிறார்.
பிறகு கோபியும் அங்கு வந்து பாக்கியா எங்க அம்மாவ கூட்டிட்டு போய் தொலைச்சிட்டா என சொல்கிறார் இதைக்கேட்டு ராமமூர்த்தி அமிர்தா ஷாக் ஆகி பாட்டியை காணுமா என்று கேட்க அம்மா திரும்ப கிடைச்சிட்டாங்க என்பதையும் கோபி சொல்கிறார்.. அப்பொழுது ராதிகா இது நான் வேலை செய்ற இடம் இங்க வந்து ஏன் கோபப்பட்டுகிட்டு இருக்கீங்க..
24 மணி நேரமும் அவங்கள பத்திய தான் நினைச்சுட்டு இருப்பீங்களா அங்க போறேன்னு சொல்றீங்க போனா திரும்பி வர முடியாது ஞாபகம் இருக்கு இல்ல என்று ராதிகா கோபியை மிரட்டுகிறார்.. பின்பு அமிர்தா போன் பண்ணி பாட்டியை காணுமா எப்படி இருக்காங்க என்று கேட்கிறார். கடைசியாக இனியாவை வழிமறித்து 4 இளைஞர்கள் உன் பெயர் என்ன எங்கிருந்து வர என்று கேள்வி கேட்கின்றனர் இனியா பயந்து போய் நிற்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது…