விஜய் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் எப்போது முடியும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என இயக்குனர் புதுப்புது பிரச்சினையாக கொண்டு வருகிறார்.
அந்த வகையில் இந்த வாரம் பாக்யாவின் ஹோட்டலுக்கு சீல் வைக்கும் காட்சிகள் தான் வர இருக்கிறது. பாக்யா கெட்டுப் போன சிக்கனில் பிரியாணி செய்ததாகவும் அதை சாப்பிட்டவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக ஹோட்டல் முன்பு மக்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
காவல்துறையும் வந்து விசாரணை செய்கிறது. மேலும் விஷயத்தை டிவியில் பார்த்துவிட்டு செழியன் எழில் என எல்லோரும் அங்கு வந்து சேர்கின்றனர். இதில் கோபி வேறு டபுள் சைடு கேம் ஆடுகிறார்.
மேலும் ஹெல்த் டிபார்ட்மென்ட் அதிகாரிகளும் வந்து விசாரணை செய்கின்றனர். அதில் அங்கு வேலை செய்பவர்கள் பாக்யா தான் சிக்கனை வாங்கியதாக சொல்கின்றனர்.
ஹோட்டல் செஃப் கூட சிக்கன் கெட்டுப்போன ஸ்மெல் வருதுன்னு சொன்னேன். ஆனா பாக்யா மேடம் தான் பரவாயில்லை சமைங்கன்னு சொன்னாங்க என கூறுகிறார். இதனால் அதிகாரிகள் ஹோட்டலுக்கு சீல் வைக்கின்றனர்.
இனி பாக்யா உண்மையை வெளியில் கொண்டு வந்து தன் மீது தவறு என நிரூபிக்க போகிறார். அவருககு துணையாக மகன்கள் இருக்கப் போகிறார்கள். இதில் கோபியின் சதித்திட்டமும் அம்பலமாக போகிறது.
இப்படி வாராவாரம் ஒரு பிரச்சனையை சமாளிக்கும் பாக்யாவுக்கு எப்போது தான் ரெஸ்ட் கிடைக்கப் போகுதோ தெரியவில்லை. ரசிகர்களும் சீரியலை முடிங்கப்பா என கெஞ்சாத குறையாக கதறி வருகின்றனர்.