Baakiyalakshmi serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் பாக்கியா பழனிச்சாமிக்கு திருமணம் நடத்தி வைக்கலாம் என பழனிச்சாமியின் அம்மா முடிவு எடுத்துள்ளார்.
கோபியை விவாகரத்து பெற்றதற்கு பிறகு பாக்கியா தன்னுடைய குடும்பத்தினர்கள் அனைவரையும் மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஓடி ஓடி சம்பாதித்து வருகிறார். அதேபோல் படிப்பறிவு இல்லை என்பதால் கோபி, ராதிகா அசிங்கப்படுத்திய நிலையில் அதனையும் கற்றுக் கொண்டு கலக்கி வருகிறார்.
அப்படி இனியா சேர்ந்திருக்கும் அதே காலேஜில் இவரும் படிப்பதற்காக சேர்ந்து இருக்கும் நிலையில் கோபி இதனை நினைத்து வருத்தப்படுகிறார். பாக்கியா காலேஜுக்கு வருவது இனியாவிற்கும் பிடிக்கவில்லை ஆனால் எழில், ஈஸ்வரி இதற்கு ஆதரவாக இருக்கின்றனர்.
இவ்வாறு போய்க்கொண்டிருக்க பாக்கியா பழனிச்சாமி இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். இதற்கு முன்பு கோபி பாக்கியா பழனிச்சாமிக்கு தான் திருமணம் என்று தவறாக புரிந்துக் கொண்டதனால் பெரும் பிரச்சனை வெடித்தது இதனை நினைத்து பாக்கியா மிகவும் வருத்தப்பட்டார்.
இந்த சூழலில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பழனிச்சாமியின் அம்மா பழனிச்சாமியை அழைத்து உனக்குனு ஒருத்தவங்க வேணும் பா நானும் இல்லைனா உன்னை யாரு பார்த்துப்பாங்க பாக்கியா வீட்ல போயி பேசட்டுமா என கேட்க என்ன பேச போறீங்க என பழனிச்சாமி கேட்கிறார்.
பாக்கியாவ உனக்கு புடிச்சிருந்தா அவங்க வீட்டில போய் உங்க கல்யாணத்தை பேசலாம் என்று சொல்ல அதற்கு பழனிச்சாமி அம்மா இப்படி ஒரு விஷயத்தை இனிமே யோசிச்சு கூட பாக்க கூடாது யாரு கிட்ட போயி பேசவும் கூடாது என்று சொல்ல அதற்கு நான் சொல்றதை கேளுப்பா என்ன அம்மா கூறுகிறார். அதற்கு பழனிச்சாமி நானும் பாக்கியாவும் நல்ல நண்பர்கள்.. நண்பர்களாகவே இருந்துட்டு போறோமே என சொல்ல இதோடு ப்ரோமோ நிறைவடைகிறது.