சரியான நேரம் பார்த்து பாக்யாவை பழி வாங்கிய கோபி.! பழனிச்சாமி உதவி செய்வாரா.? பரபரப்பாகும் பாக்கியலட்சுமி ப்ரோமோ வீடியோ.!

baakiyalakshmi serial
baakiyalakshmi serial

baakiyalakshmi : பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் பாக்கியாவின் சமையலை ராதிகாவின் உறவுக்காரர்கள் ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள், இதனால் பொறுக்க முடியாத கோபி மூஞ்சில் 300 நம்பியாரை காட்டுகிறார், அது மட்டும் இல்லாமல் இது போல் நடந்து கொள்ளாதிங்க என ராதிகாவும் கோபியிடம் கூறுகிறார். இந்த சமயத்தில் மலேசியாவில் இருந்து 20 கெஸ்ட் வருகிறார்கள். அவர்கள் இங்கேயே தங்கி கொள்ளட்டும் என பேசிக்கொள்ளும் பொழுது அவர்கள் இந்த சாப்பாட்டை எப்படி சாப்பிடுவார்கள் மலேசியன் ஃபுட் வேற மாதிரி இருக்குமே என கோபி ஏற்றி விடுகிறார்.

அதற்கு என்ன ஹோட்டலில் ஆர்டர் செய்து விட்டால் சரியாகிவிடும் என தாடி பாலாஜி கூற அதற்கு கோபி அதெல்லாம் எதற்கு தேவையில்லாத செலவு நீங்க தான இப்ப பாக்கியா சூப்பரா சமைப்பாங்கன்னு சொல்றீங்க அவங்களே இந்த மலேசியா ஃபுட்டை ரெடி பண்ணட்டும் என போட்டுக் கொடுத்து விடுகிறார் இதனால் தாடி பாலாஜியும் அதனால் என்ன சொல்லிவிட்டால் போதும் என வாக்கு கொடுத்து விடுகிறார்.

இந்த நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது இந்த ப்ரோமோ வீடியோவில் தாடி பாலாஜியின் உறவினர் ஒருவர் பாக்கியாவிடம் மலேசியாவில் இருந்து 20 கெஸ்ட் வருகிறார்கள் அவர்களுக்கும் சேர்த்து சமைக்க வேண்டும் அவர்களுக்கு மலேசியன் ஃபுட் மெனு இந்தாங்க என பாகியாவிடம் கொடுக்கிறார்கள் இதனால் பாக்கிய அதிர்ச்சி அடைகிறார் இதுவரை மலேசியா ஃபுட்ஸ் சமைக்கவே இல்லை என்பதால் கொஞ்சம் அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு வேறு வழியில்லாமல் அந்த மெனுவை வாங்கிக் கொண்டு youtube ஐ பார்த்து மலேசியன் ஃபுட் செய்ய ஆரம்பிக்கிறார். வெளியே சென்ற பாக்யாவிடம் கோபி வந்து மலேசியாவில் இருந்து 20 கெஸ்ட் வந்து இருக்காங்க மலேசியா புட் சமைக்க சொன்னாங்களா என கேட்க இதை நான்தான் ஏற்றி விட்டேன் உன்னை பழிவாங்க தான் இப்படி செய்தேன் என்பது போல் கூறுகிறார், இதனால் பாக்கியா அதிர்ச்சி அடைகிறார்.

இந்த சோதனையிலிருந்து பாக்யா மீண்டு வருவாரா எப்படியாவது அவர்களுக்கு சமைத்து விடுவாரா என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில் பழனிசாமி வந்து உதவி செய்வாரா எனவும் ஒரு சிலர் எதிர்பார்க்கிறார்கள் என்ன நடக்கும் என்பதை வருகின்ற  எபிசோடில் தெரிய வரும்.