உதவிய பழனிச்சாமி.. பாக்கியாவை அனைவரும் முன்பும் அசிங்கப்படுத்திய இனியா.!

baakiyalakshmi
baakiyalakshmi

Baakiyalakshmi: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியாவை பெண் வீட்டுக்காரர்கள் சரியாக சமைக்காத காரணத்தினால் உட்கார வைத்திருக்கும் நிலையில் இதனை தெரிந்துக் கொண்டு பழனிச்சாமி, ராமமூர்த்தி வருகின்றனர். பழனிச்சாமி ஒரு தீஞ்சு போன பாயாசத்துக்காக இந்த திருமணத்தை நிறுத்த போறீங்களா அங்க பாருங்க அந்த பொண்ணு எவ்வளவு அழுதுகிட்டு இருக்கா.

கல்யாணம் ஆனா இத்தனை வருஷத்துல ஒரு நாள் கூட நீங்க டீ போட்டு அது தீஞ்சு போனது கிடையாதா இதுவும் தெரியாமல் நடந்த ஒரு பிரச்சனை தான் எனவே இந்த திருமணத்தை நடக்க விடுங்க என கூறுகிறார். பிறகு மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் இதனைப் பற்றி யோசிக்க மறுபுறம் அவர்களுடைய காலணியில் இனியாவிற்கு முதல் மார்க் எடுத்ததால் கிப்ட் கொடுத்து பாராட்டுகிறார்கள்.

அனைவரும் இனியா உடன் இருக்க பாக்கியா மட்டும் வராத காரணத்தினால் இனியா கோபமாக இருக்கிறார். பிறகு மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் இந்த திருமணத்திற்கு ஒத்துகின்றனர். எனவே பாக்கியா மகிழ்ச்சி அடைய இவ்வளவு பெரிய பிரச்சனையில் இருந்து காப்பாற்றிய பழனிச்சாமிக்கு நன்றி கூறிவிட்டு ராமமூர்த்தி ஏமா போன் எடுக்கவே இல்லை என கேட்கிறார்.

பிறகு இனியா எத்தனை மார்க் என கேட்க அவதான் ஸ்கூல் ஃபர்ஸ்ட் என சொன்ன உடன் பாக்யா மகிழ்ச்சி அடைகிறார். எனவே மீண்டும் பாயாசம் செய்ய அதனை பழனிச்சாமி, ராமமூர்த்தி சாப்பிட்டு விட்டு நன்றாக இருப்பதாக கூறுகின்றனர். இதனை அடுத்து பாக்கியாவை அழைத்துக் கொண்டு வர அனைவரும் பாக்யா வருவதை பார்த்து மகிழ்ச்சியடைகின்றனர்.

என்ன ஆச்சு அம்மா என எழில் கேட்க பெரிய பிரச்சனை ஆயிடுச்சு டா என பேசிக் கொண்டிருக்க பழனிச்சாமி இனியா கிட்ட போய் பேசுங்க என கூறுகிறார். ஆனால் இனியா பாக்யாவிடம் பேசாமல் உனக்கு உன்னுடைய கேட்டரிங் தான முக்கியம் என கூறிவிட்டு கோபமாக கிளம்பி விடுகிறார். இதனை பார்த்து கோபி மகிழ்ச்சி அடைய பிறகு ராதிகா இது தான் அந்த பழனி சாமியா என கேட்க ஆமாம் என கோபி கூறுகிறார். இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.