+2வில் அதிக மார்க் எடுத்த இனியா.. பாக்கியாவின் உணவால் நின்ற திருமணம்.! பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் இன்றைய எபிசோடில் இனியாவிற்கு ரிசல்ட் என்பதால் பாக்யா தொடர்ந்து இனியாவிற்கு ஃபோன் செய்கிறார். ஆனால் பாக்கியாவிற்கு டவர் கிடைக்கவில்லை மேலும் இனியாவும் பாக்கியாவிற்கு ஃபோன் போட போகாத காரணத்தினால் ஏன் அம்மா போன எடுக்க மாட்டேங்குறாங்க என வருத்தப்படுகிறார்.

இந்நிலையில் அனைவரும் இனியாவின் ரிசல்ட்டுகாக காத்திருக்க இந்த நேரத்தில் ஸ்கூலில் இருந்து போன் செய்து கங்க்ராஜிலேஷன் இனியா நீ தான் ஸ்கூலின் ஃபர்ஸ்ட் மார்க் என்ன கூறியவுடன் மகிழ்ச்சி அடைகிறார். இதனைப் பற்றி வீட்டில் இருப்பவர்களிடம் கூற அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். பிறகு இனியாவை அழைத்துக் கொண்டு ஸ்கூலுக்கு கிளம்புகிறார்கள்.

இந்த நேரத்தில் பாக்யா இனியாவை நினைத்துக் கொண்டு இருந்ததால் சமையலை சரியாக பார்க்கவில்லை. எனவே செல்வி பாயாசத்தை அடி பிடிக்க வைத்துவிட்டார். இதனை திருமணம் நடக்கும் பெண் வீட்டுக்காரர்கள் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுக்கு கொடுக்க வந்தவங்களுக்கு ஒழுங்கா பரிமாறக்கூட துப்புல இவ்வளவு கேவலமான பாயாசத்தை எங்களுக்கு தந்து வரவேற்கிறீங்க இதுதான் நிச்சயதார்த்தத்திற்கு வருபவர்கள் அனைவருக்கும் தரப் போறீங்களா என்னை திட்டிக் கொண்டிருக்க இந்த நேரத்தில் பாக்கியா வந்து என்னவாச்சி என செல்வி கேட்கிறார்.

பிறகு நடந்த விஷயங்களை கூற அதிர்ச்சடைகிறார். எங்க அந்த சமைக்க வந்த பொம்பள அதனாலதான் இவ்வளவு பிரச்சனையும் எனக் கூற பாக்யா வருகிறார். அப்பொழுது பெண் வீட்டுக்காரர்கள் பாக்யாவை திட்ட மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் நீங்க ஆரம்பத்துல இருந்து மரியாதை தரல எதற்கு அவங்கள திட்டுறீங்க என சொல்கின்றனர்.

இந்த நேரத்தில் கோபி இனியாவிற்கு ஃபோன் செய்து மார்க் என்ன என கேட்க நான் தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட் மார்க் என்ன கூற அதற்கு கோபி மகிழ்ச்சி அடைகிறார். எங்க இருக்க உடனே நான் உன்னை பார்க்கணும் என சொல்ல இல்ல நான் ஸ்கூல்க்கு போய்க்கொண்டிருக்கிறேன் என இனியா சொல்கிறார் பிறகு மகிழ்ச்சியில் கோபி ராதிகாவை அழைத்துக் கொண்டு ஸ்கூலுக்கு செல்கிறார்.

அங்கு ஸ்கூலில் இனியாவை பூ தூவி அழைத்து வாழ்த்துக்கள் கூறுகிறார்கள் இந்த நேரத்தில் கோபி வேகமாக வந்து இனியாவை கட்டிப்பிடித்து பெருமையாக இருப்பதாக கூறி பேசுகிறார். இதனை அடுத்து மறுபுறம் பாக்கியா இப்படி சமைச்சது என்னுடைய மேல தான் தப்பு என்னை மன்னித்து விடுங்கள் என கூற மாப்பிள்ளையின் அம்மா நீ வாய மூடு பேசவே கூடாது என கூறி விடுகிறார்.

இந்த நேரத்தில் மணப்பெண்ணின் மாமா பாக்யா என சமைக்கும் அனைவரையும் அழைத்து சென்று ஒரு இடத்தில் உட்கார வைத்து இந்த கல்யாணம் மட்டும் நிக்கட்டும் உங்கள எல்லாத்தையும் போலீசில் புடிச்சு கொடுத்து விடுகிறேன் எனக் கூற இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.