பாக்கியாவை வேவு பார்க்க கோபி போட்ட புதிய திட்டம்.. இனி தான் இருக்கு ரகளையே

baakiyalakshmi
baakiyalakshmi

Baakiyalakshmi serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் ஆர்டர் வேலைகள் அதிகமாக இருந்த காரணத்தினால் பாக்கியாவிற்கு பதிலாக அமிர்தா சென்று அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொள்கிறார். பாக்கியா எங்கே என்று கேட்க அவங்களுக்கு பதிலா தான் நான் வந்து இருக்கேன் என அமிர்தா கூறுகிறார்.

இதனால் செல்வி அமிர்தாவிடம் கடுமையாக பேச பிறகு ஒரு லிஸ்ட்டை கொடுத்து இதில் இருக்கும் அனைத்தையும் செய்து விட வேண்டும் என சொல்ல அமிர்தா செய்துவிடலாம் என்று நம்பிக்கையோடு சொல்ல ராதிகா கிளம்பி விடுகிறார். பிறகு வீட்டில் ஈஸ்வரி, ராமமூர்த்தி, எழில் என அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க இந்த நேரத்தில் பாக்கியா வருகிறார்.

இவர் மிகவும் டயர்டாக இருப்பதை பார்த்து ஏன் அனைத்தையும் இழுத்து போட்டுக்கிட்டு செய்ற எல்லாத்தையும் மாற்றிக் கொள் என கூறுகிறார்கள். இப்படி இருப்பது தான் எனக்கு பிடிச்சிருக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை நான் ரொம்ப வருஷமா ஒரே இடத்தில் நின்று விட்டேன் என கூறிவிட்டு  கிளம்புகிறார். பிறகு இரவு ஆனதும் பாக்கியா சமைத்துக் கொண்டிருக்க எழில் காய்கறிகளை கட் பண்ணி தருகிறார்.

பாக்கியா வேண்டாம் என்று கூறிய பிறகும் செய்து கொண்டிருக்க இந்த நேரத்தில் அமிர்தா, செல்வி வந்து விடுகிறார். பிறகு செல்வி பாக்கியாவிடம் நடந்ததை அனைத்தையும் கூற நீங்க எதுவும் எதிர்த்து பேசவில்லையே என்று கேட்கிறார். அப்படியெல்லாம் எதுவும் செய்யவில்லை லீவு போட்டு விட்டு அனைத்து வேலைகளையும் ராதிகா சொன்னது போலவே செய்து விடலாம் என்று கூறுகிறார் பாக்கியா.

எனவே இதற்காக காலையில் எழுந்து வேலைகள் பார்த்துக் கொண்டிருக்க ஏன் இவ்வளவு சீக்கிரமா எழுந்து வேலை செய்ற என ஈஸ்வரி கேட்கிறார். பிறகு வேலைகளை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று பாக்கியா சொல்ல இவரை அடுத்து அமிர்தாவும் வருகிறார் ஆனால் அமிர்தாவையும் அனுப்பி வைத்து விடுகிறார்.

பிறகு ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் செல்ல அங்கு இப்போ எல்லாம் பேசுறதே கிடையாது என பழனிச்சாமி என அனைவரும் கேட்டுக் கொண்டிருக்க தனது காலேஜை பற்றி சொல்லியும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார் பாக்கியா. இந்த நேரத்தில் கோபி வர இந்த லம்போஸ்டர் கிட்ட சிரிச்சு எவ்வளவு சந்தோஷமா பேசுற பாரு என கூறிவிட்டு ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் சேர வெளியில் வந்த உடன் பழனிச்சாமியை சந்தித்து பேசிக் கொண்டிருக்கிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.