முதல் முறையா கரெக்டா கேள்வி கேட்ட ராதிகா.! செழியன் கதை முடிஞ்சது.. அடுத்து எழில் தான்.. கவலைப்படும் பாக்கியா..

baakiyalakshmi-serial today episode november 9

Baakiyalakshmi serial : பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் பாக்யாவிற்கு சப்போர்ட் பண்ணி ராதிகா வீட்டில் உள்ள அனைவரையும் கேள்வி கேட்கிறார். அது மட்டும் இல்லாமல் தப்பு செய்தது செழியன் ஆனா அவனை கேள்வி கேட்காமல் பாக்கியாவை கேள்வி கேட்டுகிட்டு இருந்தீங்க என கேட்கிறார் உடனே கோபி ராதிகாவை அழைத்துக் கொண்டு ரூமுக்கு வருகிறார். என்ன கோபி எல்லாத்தையும் சரியா பேசுறீங்கன்னு நினைப்பா எனக் ராதிகா கேட்க, இது எங்க குடும்பத்தோட பிரச்சனை இதுல நீ தலையிடாதே என கோபி ராதிகாவை பார்த்து கூற அப்ப நான் யார் என கேள்வி கேட்கிறார்.

வாய் தவறி சொல்லிட்டேன் தயவு செஞ்சு இதை வச்சு ஒரு சண்டையை போட வேணாம் எனக் கூறிவிட்டு கீழே செல்கிறார் அப்பொழுது பாக்கியாவை பாட்டி திட்டிக் கொண்டிருக்கிறார் நீ முன்னாடியே சொல்லி இருந்தா ஏதாவது செஞ்சு இருக்கலாம் நீ சொல்லாமல் மறைத்தது தான் இவ்ளோ பெரிய பிரச்சனைக்கு காரணம். என அனைவரும் கேள்வி கேட்க, எழில் தப்பு செஞ்சவன் செழியன் நீங்க திட்டனும்னா அவன திட்டுங்க அம்மாவா ஏன் திட்டுறீங்க? என எதிர்த்து பேசுகிறார்.

நடு ரோட்டில் முத்து, மீனாவை இறக்கி விட்டு காரை தூக்கிய பைனான்சியர் – பரபரப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

மற்றொரு காட்சியில் செழியனிடம் கோபி ஜெனியை நீ லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிகிட்ட ரெண்டு பேரும் நல்லா தான் அண்டர்ஸ்டா இருந்தீங்க அப்புறம் ஏன்டா இப்படி ஒரு தப்பு பண்ணினா எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார் ஜெனிக்கும் எனக்கும் ஒரு சில விஷயம் ஒத்து வரல என செழியன் கூற இதலாம் ஒரு காரணமாக இரண்டு பேரும் ஒக்காந்து பேசி இருந்தா ஒழுங்கா இந்த மாதிரி பிரச்சனையே வந்திருக்காது என பேசுகிறார்.

அதற்கு செழியன் கோபியை பார்க்க என அப்படி பார்க்காதடா என்னோட சிச்சுவேஷன் வேற நான் அப்பவே ராதிகாவை லவ் பண்ணுனேன் ஆனா உங்க தாத்தா தான் பாக்கியா புடிச்சு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க பாக்கியாவுக்கும் எனக்கும் எந்த ஒரு விஷயத்திலும் செட் ஆகல அதனாலதான் என்னோட வாழ்க்கை அப்படி மாறிடுச்சு என பேசுகிறார்.

நீதி வென்றதா? சூழ்ச்சி விழ்ந்ததா? காரசாரமாக நடைபெற்ற கோர்ட் டாஸ்க்

அடுத்த காட்சியில் பாக்கியா அழுது கொண்டிருக்கும் பொழுது இனிய சமாதானப்படுத்துகிறார் அது மட்டும் இல்லாமல் எழிலும் சமாதானப்படுத்துகிறார் தப்பு செஞ்சவன் செழியன் அவனை யாருமே கேள்வி கேட்கல எல்லாரும் உன்னையே தான் திட்டிக்கிட்டு இருக்காங்க என பேச வீட்ல திட்றதுக்கு பாக்கியா மட்டும் தான் இருக்கா அதனால எல்லாம் திட்டிட்டு இருக்காங்க என பேசுகிறார்.

அதே போல் எழில் நீ அப்பவே சந்தேகப்பட்ட அப்பயே நீ எல்லாரும் முன்னாடியும் சொல்லி இருக்கலாம் அம்மா அப்படி சொல்லி இருந்தா நீங்க இப்ப தேவையில்லாம எல்லாரும் முன்னாடியும் தலை குனிந்து நிற்க வேண்டிய அவசியம் கிடையாது அதற்கு ஏழிலை பரிதாபத்துடன் பார்க்கிறார் பாக்கியா ஏனென்றால் எழில் பிரச்சனை அடுத்த பிரச்சனையாக இருக்கிறது அமிர்தாவை திருமணம் செய்து கொண்டவர் மீண்டும் வந்து விட்டதால் எழிலின் வாழ்க்கை என்ன ஆகும் என யோசித்துக் கொண்டிருக்கிறார் ஆனால் இதனை முன்கூட்டியே சொல்லிவிட வேண்டும் எனவும் முயற்சி செய்கிறார் பாக்கியா இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.