விஜய் டிவியில் ஒளிபரப்புப்பட்டு வரும் எத்தனையோ சீரியல்கள் இருந்தாலும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாலும் இருந்து வருகிறது. இந்த சீரியலில் கோபி முதலில் ஒருவரை திருமணம் செய்து கொண்டு பின்பு பாக்யாவை கழட்டி விட்டு ராதிகாவை திருமணம் செய்து கொள்கிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவமே இந்த சீரியல் விறுவிறுப்பாக போவதற்கு காரணம்.
இந்த நிலையில் இன்றைய எபிசோடில் மூக்கு முட்ட குடித்துவிட்டு கோபி வீட்டிற்கு வருகிறார் யார் கண்ணிலும் சிக்காமல் மேலே செல்கிறார், அங்கு ராதிகா கட்டிலில் அமர்ந்து கொண்டிருக்கும் பொழுது கோபி தள்ளாடி வருவதை பார்த்து விட்டார் என்ன கோபி இன்னைக்கும் குடிச்சிருக்கியா என்ன கேட்கிறார். லைட்டா தான் குடிச்சிருக்கேன் அதை எப்படி என்னால விட முடியும் கொஞ்சம் கொஞ்சமா எப்படியாவது விட்டுடறேன் என சமாளிக்கிறார் அது மட்டும் இல்லாமல் குடித்தால் தான் உன் பக்கம் இருக்கிற நியாயம் எனக்கு தெரியுது.
நாம மூணு பேரும் இங்கேயேதான் இருப்போம் மயூவை கூட்டிட்டு வந்தியா மயூவ பார்த்தியா எனக் கேக்கிறார் கோபி அதற்கு ராதிகா மயூவ நான் பார்க்கல அம்மா கூட தான இருக்க பத்திரமா தான் இருப்பா நாளைக்கு கண்டிப்பா நான் மயூவை போய் காலைல பார்க்கிறேன் என கூறிக்கொண்டு ராதிகாவை கொஞ்சி கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ராதிகா கையில் முத்தமிட்டு நெற்றியில் முத்தமிடுகிறார் அந்த சமயத்தில் பாக்கிய மேலே வருகிறார்.
மேலே வந்து ரூம் கதவை திறக்கிறார் அந்த நேரத்தில் ராதிகாவிற்கு கோபி முத்தம் கொடுத்து கொண்டு இருக்கிறார் இதை பார்த்த பாக்யாவின் மனசு படாத பாடுபடுகிறது. எதுவுமே பேச முடியாமல் திணறி போய் கீழே செல்கிறார். பாக்கியா எதுக்கு இங்க வந்தா என்ன கோபி ராதிகாவிடம் கேட்க அவ வேவு பாக்க வந்திருப்பா என ராதிகா கூறுகிறார். பின்பு பாக்கியா சென்றவுடன் என் ரூம்ல தான் அவங்க இருக்காங்க என அனைவரிடமும் கூறுகிறார் அதற்கு ஈஸ்வரி அவை எதுக்கு அங்க இருக்கா என கத்துகிறார்.
அதுமட்டுமில்லாமல் எழில் அவங்க ரெண்டு பேரையும் கழுத்தை புடிச்சு வெளியில தள்ளிடவா என எகிரி குதிக்கிறார் ஆனால் பாக்கியா அவரை அடக்கி வைக்கிறார். பின்பு இனியா நான் எங்க தூங்குறது எனக்கு கேட்க எழில் என்னுடைய ரூமில் நீயும் அம்மாவும் படுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறுகிறார் அதற்கு அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார் பாக்யா. ஜெனி என்னோட ரூமில் படுத்துக் கொள்ளலாம் இனியா எனக் கூற அதற்கு ஓகே என கூறிவிட்டு இனியவை அழைத்து செல்கிறார் ஜெனி.
அங்கு செழியன் உட்கார்ந்து கொண்டிருக்க இனியா நம்ம ரூம்ல தான் தூங்க போறா என செழியனிடம் ஜெனி கூறுகிறார். அதற்கு ஏன் இனியா ஊன் ரூம்ல தான தூங்குவ என கூற உடனே இனியா என் அண்ண நான் உங்க ரூம்ல தூங்க கூடாத எனக் கேட்க அப்படி இல்ல பாப்பா உன் ரூம்ல தான் தூங்குவ என்னாச்சு என கேட்க அங்க தான் இப்ப அவங்க ரெண்டு பேரும் வந்துட்டாங்களே என கூறுகிறார் உடனே செழியன் அப்பா பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கல எனக் கூறிவிட்டு அனைவரும் படுத்து கொள்கிறார்கள்.
கோபி ஒரு போன் கால் வரும் பொழுது மேலே நின்று பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது எழில் மேலே சென்று கோபியை முறைத்துக் கொண்டே இருக்கிறார் கோபி எழிலை பார்த்து நீ என்னடா முறைக்கிற என்ன முறைக்கிற அளவுக்கு நீ இன்னும் வளரல என கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் சொந்த வீட்டை வித்துப்புட்டு காசையும் வாங்கிவிட்டு அங்கேயே வந்து தங்கி இருக்கீங்களே உங்களுக்கெல்லாம் வெக்கமாவே இல்லையா என எழில் கோபியை பார்த்து கேட்க.
உடனே கோபி வெறும் 2 லட்சம் தான் கொடுத்து இருக்கீங்க மொத்த காசையும் கொடுத்தால்தான் உன் அம்மா பேருக்கு வீடை மாத்துவேன் என கோபி கூறுகிறார் உடனே அங்கிருந்து வந்த பாக்கியா எழில் நீ உன் ரூமுக்கு போய் தூங்கு எதுக்கு தேவையில்லாம தேவையில்லாதவங்க கிட்ட பேசிகிட்டு இருக்க என கூறுகிறார் அதற்கு கோபி ஆடு கத்துவது போல் கத்தி முந்தானை புடிச்சுகிட்டு ஓடு என கூறுகிறார் அனைவரும் கிளம்பி போன பிறகு கோபி தான் பேசியதை நினைத்து தலையில் அடித்துக் கொள்கிறார் இத்துடன் என்ற எபிசோடு முடிகிறது.