கணேஷ் பற்றிய உண்மையை வீட்டில் போட்டு உடைத்த பாக்கியா.. கோவிலில் அமிர்தாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்..

Baakiyalakshmi
Baakiyalakshmi

Baakiyalakshmi today episode december 27 : பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் கணேஷ் வீட்டிற்கு வந்து கொண்டிருப்பது தெரிந்து பாக்கியா அவசர அவசரமாக எழில், அமிர்தா, நிலாவை கோவிலுக்கு அனுப்பி வைக்கிறார். எழில் அமிர்தா பைக்கில் கிளம்பும்பொழுது அந்த இடத்திற்கு கணேசும் வந்து நான் வரது தெரிஞ்சு உங்கள பாக்கியலட்சுமி அவசர அவசரமா கோவிலுக்கு அனுப்பி வைக்கிறார்களா..

இன்னைக்கு நான் அமிர்தா கிட்ட உண்மைய சொல்லாம போக மாட்டேன் என்று கணேஷும் அவர்களை பின்தொடர்ந்து கோவிலுக்கு செல்கிறார். இன்னொரு பக்கம் பாக்யா வீட்டில் எல்லோரையும் உட்கார வைத்து உங்க கிட்ட எல்லாம் ஒரு உண்மைய சொல்லணும், நான் இவ்வளவு நாள் இதை எப்படி சொல்றதுன்னு தெரியாம தான் குழம்பி போய் இருந்தேன் இன்னைக்கு நான் சொல்லியே ஆகணும்.

பெண்ணுடன் சுற்றி வரும் விஷால்.. ரசிகர் பார்த்ததால் முகத்தை மூடிக்கொண்டு ஓட்டம்

அதனாலதான் நான் எழிலையும் அமிர்தாவையும் கோவிலுக்கு அனுப்பி வச்சிருக்கேன் என்று  அமிர்தா உடைய பழைய வாழ்க்கை உங்க எல்லாருக்கும் தெரியும் தானே என்று பாக்கியா ஆரம்பிக்கிறார். அப்பொழுது கோபி தெரியுமே, அமிர்தா சின்ன வயசுலயே கல்யாணம் ஆகி அவ பிரக்னண்டா இருக்கும்பொழுது அவளோட கணவர் ஆக்சிடெண்ட்ல இறந்து விதவை ஆயிட்டா..

அப்புறம் எழிலுக்கு அமிர்தாவை பிடிச்சு போய் ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க தானே இது இப்ப எதுக்கு கேக்குற என்று சொல்ல, பாக்கிய நம்ம எல்லோரும் இறந்துட்டதா நினைச்சிட்டு இருக்குற கணேஷ் சாகல உயிரோட தான் இருக்கான் என்று பாக்யா சொல்வதும் ஈஸ்வரி இராமமூர்த்தி கோபி, செழியன், ராதிகா எல்லோரும் ஷாக் ஆகி எப்படி செத்துப் போனவன் உயிரோட வர முடியும் என்று கேட்கின்றனர்.

மகாவின் நிலைமையை பார்த்து கோபமான கோடிஸ்வரி.. கடைசியில் ட்விஸ்ட் வைத்த ராகவ் – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

பிறகு பாக்கியா நடந்தவற்றையெல்லாம் சொல்கிறார் ஒருநாள் நம்ம வீட்டு வாசல்ல நின்னு அமிர்தவ பாத்துட்டு இருந்தான், அப்புறம் கணேஷ் உடைய அப்பா அம்மா என்ன பாத்து கணேஷ் உயிரோட வந்த விஷயத்தை சொன்னாங்க என நடந்தவற்றையெல்லாம் பாக்கியா வீட்டில் சொல்கிறார். இன்னொரு பக்கம் எழிலும் அமிர்தாவும் கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கின்றனர் அப்பொழுது கணேஷ் அவர்களை மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.

எழில்  யாரோ நம்மள ஃபாலோ பண்ற மாதிரியே இருக்கு என சந்தேகப்படுகிறார்.. பிறகு எழில், அமிர்தா சாமி கும்பிட்டு விட்டு உட்கார்ந்து இருக்கும் பொழுது நிலா பாப்பாக்கு உடம்பு சரியில்லாத போது ஒரு வேண்டுதல் வச்சிருந்தேன் அதுக்கு போய் நான் கேட்டுட்டு வரேன் என்று தனியாகப் போகிறார் அப்பொழுது கணேஷ் அமிர்தா என்று கூப்பிடுகிறார். அமிர்தா கணேஷை பார்த்து நம்ப முடியாமல் திணறிப் போய் நிற்கிறார் இதோடு இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..