பேங்கில் லோன் கேட்டு அசிங்கப்பட்ட பாக்கியா.. வயசுக்கு ஏத்த பேச்ச பேசு என திட்டிய இனியா

Baakiyalakshmi
Baakiyalakshmi

Baakiyalakshmi serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கண்டு வருகிறது. இன்றைய எபிசோடில்.. செழியன் அம்மாவிடம் சென்று ஜெனி வளைகாப்பு பத்தி அவங்க அம்மா பேசுனாங்க வளைகாப்பு முடிஞ்சதும் ஜெனி அவங்க அம்மா வீட்டுக்கு போய்டுவாளா என்று கேட்க பாக்கியா ஆமான்னு சொல்றாங்க..

அதுக்கு செழியன் அம்மா ஜெனி இங்கேயே இருக்கட்டும் அவங்க அம்மா வீட்டுக்கு போக வேண்டான்னு சொல்லுங்க அம்மான்னு கேட்கிறாரு பாக்கியா அதுக்கு சரி பார்த்துக்கலாம்னு சொல்லிடுறாங்க.. அப்புறம் ராமமூர்த்தி ஈஸ்வரியை நினைச்சு ரொம்ப வருத்தப்படுறாரு அவ இல்லாம என்னால இருக்க முடியல அவளை பாக்கணும் போல இருக்கு ஈஸ்வரிய உடனே வர சொல்லுங்கன்னு சொல்றாரு..

பாக்கியாவும் செழியனும் அவரை சமாதானப்படுத்தி அத்தை வந்துருவாங்க நீங்க தூங்குங்க மாமான்னு சொல்லிட்டு போறாங்க.. அப்புறம் பாக்கியா இங்கிலீஷ் கிளாஸ் போயிட்டு அடுத்து கேண்டின்கு போறாங்க அங்க செல்வி கிட்ட ஒரு பேங்க்ல சுய தொழில் பண்ற பெண்களுக்கு குறைந்த வட்டியில் லோன் தராங்களாம் ராஜசேகரன் சார் சொன்னாரு வா நம்ம போய் பாத்துட்டு வரலான்னு..

செல்வியை கூட்டிட்டு பாக்கியலட்சுமி அந்த பேங்க்கு போய் டாக்குமெண்ட் எல்லாம் தராங்க அதெல்லாம் பாத்துவிட்டு மேனேஜர் எல்லாம் இருக்க உங்க டிகிரி சர்டிவிகேட் வேணும் அது இருந்தால் லோன் கிடைத்துவிடும் அப்படின்னு சொல்றாங்க அதுக்கு பாக்கியா நான் பிளஸ் டூ வரை நான் படிச்சேன் டிகிரி படிக்கல அப்படின்னு சொல்றதும் மேனேஜர் அப்ப இந்த லோன் உங்களுக்கு கிடைக்காதுன்னு சொல்றாரு.. நைட் தூங்கும் போது பாக்கியா இனியா கிட்ட நானும் காலேஜ் வரட்டா எனக்கும் படிக்கணும்னு ஆசையா இருக்குன்னு கேக்குறதுக்கு இனியா அம்மா காலேஜ்லாம் வரேன்னு ..

சொல்லிட்டு என்கூட வந்துவிடாதே நான் காலேஜ் முடிச்சுட்டு கல்யாணம் பண்ணிப்பேன் நீ பண்ணுப்பியா அப்படின்னு கேக்குறாங்க அதுக்கு பாக்கியா எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு உன் வயசுக்கு தகுந்த போல பேசுன்னு சொல்றதுக்கு இனியா அப்ப நீயும் உன் வயசுக்கு தகுந்த போல பேசு அந்தந்த வயசுல படிச்சிருக்கணும் இப்ப போய் படிக்கணும்னு சொல்லாத என்ன தூங்க விடுமான்னு சொல்லிட்டு தூங்குறாங்க..

இன்னொரு பக்கம் ராமமூர்த்தி இன்னும் ஈஸ்வரிய நெனச்சு வருத்தப்பட்டுக்கிட்டு இருக்காரு அதற்கு ஜெனியும் செழியனும் தாத்தாவுக்கு ஆறுதல் சொல்றாங்க அப்புறம் செழியன் பாட்டிக்கு வீடியோ கால் பண்ணி தாத்தா கிட்ட கொடுக்குறாங்க பாட்டியும் தாத்தாவும் ரொம்ப சந்தோஷமா பேசிட்டு போன் வைக்கிறாங்க..இதோட இன்றைய எபிசோடு முடிந்துவிட்டது.