விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களிடையே மிகவும் பரவலாக பார்க்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவிற்கு போன் போடுகிறார் ஆனால் ராதிகாவின் மகள் மயூரா போன் அட்டென்ட் பண்ணி விடுகிறார் அப்பொழுது கோபி ராதிகாவிடம் கெஞ்சுகிறார் உடனே மயூரா கோபியிடம் பேச நினைக்கிறார். ஆனால் அதற்குள் ராதிகா மொபைலை வாங்கி கட் செய்து விடுகிறார்.
பின்பு கோபி மொபைலை பெட்டில் தூக்கி எறிந்துவிட்டு பாத்ரூம் செல்கிறார் அந்த சமயத்தில் பாக்கியா கோபியின் மொபைலை பார்த்து யாரிடம் பேசிக் கொண்டிருந்தார் என மொபைலை பார்க்கிறார் அப்பொழுது ஆர் என்ற லெட்டரில் ஒரு நம்பர் இருக்கிறது. அது யார் என்று தெரியாமல் நிற்கிறார் உடனே கோபி பாத்ரூமில் இருந்து வெளியே வருகிறார் உடனே பாக்யாவின் கையிலிருக்கும் மொபைலை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
கோபி என்னுடைய பர்மிஷன் இல்லாமல் எதற்காக என்னுடைய மொபைலை எடுத்த என பாக்கியாவிடம் எரிந்து எரிந்து விழுகிறார். பாக்கியா நீங்கள் போன் வந்தவுடன் எதற்காக பதற்றம் அடைகிறார்கள் உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம் அது பெண்ணா ஆனா என துருவித்துருவி கோபியிடம் கேள்வியை கேட்கிறார். அதற்கு கோபி அதெல்லாம் உன்னிடம் சொல்வதற்கு அவசியம் கிடையாது.
வீட்டிற்கு வந்தால் என்னை நிம்மதியாக இருக்க விடுறியா சும்மா துருவித்துருவி என்கிட்ட கேள்வி கேட்கிறதெல்லாம் வெச்சுகாதே என பாக்யாவின் மீது கோபி பாய்கிறார். இப்பொழுது கோபியின் அப்பா கொஞ்சம் பேசுவதற்கு பழகிவிட்டால் அப்பொழுது தன்னுடைய பேத்தியிடம் நியூஸ் பேப்பரை பார்த்து படித்துக் காட்டுகிறார். உடனே கோபி யையும் அழைத்து படிக்கச் சொல்கிறார்கள் அப்பொழுது கோபியின் அப்பா கள்ளக்காதல் பற்றி இலைமறைகாயாக படிக்கிறார்.
உடனே கோபியின் முகம் சுருங்குகிறது அதனை கோபியின் அப்பா கண்டுபிடித்து விடுகிறார். கோபி தனியாக இருக்கும் நேரத்தில் கோபியின் அப்பா அவரிடம் சென்று உன்னுடைய வண்டவாளங்கள் எல்லாம் எனக்கு தெரியும் உன்னால் தான் நான் கீழே விழுந்தேன் நீதான் மோசமானவன் என வாக்குவாதம் செய்கிறார்கள் இருவரும். அதற்கு கோபி அதான் எல்லாம் முடிந்துவிட்டதே இனிமே என்ன விடுங்க அப்படி எனக் கூறுகிறார்.
அதனால்தான் உன்னை சும்மா விடுகிறேன் இல்லை என்றால் அனைவரிடமும் சொல்லி விடுவேன் என கோபியின் அப்பா கூறுகிறார். அதேபோல் ராதிகா வீட்டில் அவருடைய அண்ணன் எனக்கு கோயம்புத்தூரில் நிறைய வேலைகள் இருக்கிறது அதை எல்லாம் போட்டுவிட்டு இங்கே வந்தேன் நீ கோபியை திருமணம் செய்து கொண்டால் தான் நல்லது எனக் கூறுகிறார் ஆனால் அதற்கு ராதிகா மறுத்துவிடுகிறார்.
நான் இங்கே இருந்தால் மட்டும் தானே ராஜேஷ் கோபி இருவரும் என்னை தொல்லை செய்வார்கள் நான் எங்கேயாவது போய் விடுகிறேன் மும்பை செல்கிறேன் எனக் கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் எங்கள் அலுவலகத்தில் நான் மும்பைக்கு டிரான்ஸ்பர் கேட்டு உள்ளேன் எனக்கு சீக்கிரம் கிடைத்துவிடும் நாங்கள் அங்கே சென்று விடுகிறோம் என கூறுகிறார் ராதிகா.
ராதிகாவின் அம்மா மயூரா வை பற்றி நினைத்துப் பார்த்தாயா அவருடைய படிப்பு என்ன ஆவது என கேட்கிறார் அதற்கு ராதிகா ஸ்கூல் மும்பையிலும் இருக்கிறது நான் அவளைப் பார்த்துக் கொள்வேன் நான் படிக்க வைத்துக் கொள்கிறேன் எனக் கூறி விட்டு வேகமாக செல்கிறார்.
ராதிகா பாக்கியவை சந்தித்து தான் மும்பை செல்வதை கூறுகிறார் உடனே பாக்யா அதிர்ச்சியடைகிறார் இன்றைய எபிசோட் முடிகிறது.