திருமண மேடையிலேயே வெடித்தது பூகம்பம்.! ஏழரையை கிளப்பும் எழில், கோபி.?

ezhil
ezhil

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக பார்க்கப்படுவது பாக்கியலட்சுமி சீரியல் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறார்கள் மேலும் இந்த சீரியலை காணுவதற்காகவே ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ஒவ்வொரு நாளும் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த சீரியல், இந்த நிலையில் இன்றைய எபிசோட் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்குக் காரணம் ராதிகாவின் மகள் மையு  பாக்கியலட்சுமியை பார்த்தவுடன் ஓடி சென்று இந்த உடை நல்லா இருக்கிறதா என கேட்கிறார் நல்லா இருக்குமா என பாக்கியலட்சுமி கூறுகிறார்.

உடனே மையூ நீங்க ஏன் முன்னாடி மாதிரி என்கிட்ட பேசுவதே இல்லை என கேட்கிறார் அதுமட்டுமில்லாமல் என்னை வீட்டுக்கும் கூட்டிக்கொண்டு போகமாட்டேன் என்கிறீர்கள் என மயூ கேட்ட்க ஆனால் பாக்கியலட்சுமியால் பதில் கூற முடியாமல் தவித்து வருகிறார். உடனே மையூ  டாடி எங்க வீட்ல இருப்பதால் உங்களுக்கு கோபமா ஆன்ட்டி என கேட்கிறார் அதற்கும் பதில் சொல்ல முடியாமல் நிற்கிறார் பாக்கியலட்சுமி.

உடனே ராதிகா மயு இங்கே வா உன்னை அவங்க கிட்ட பேச கூடாதுன்னு எத்தன டைம் சொல்றது என மயூவை கண்டிக்கிறார்  உடனே மையூ நான் சும்மாதான் பேசிகிட்டு இருந்தேன் என கூறுகிறார் உடனே ராதிகா நான் சொல்றத கேளு எனக் கூறுகிறார். அந்த நேரத்தில் ஐயர், பொண்ணு மாப்பிள்ளை கூட்டிக் கொண்டு வாங்கள் என கூறுகிறார் உடனே செழியனிடம் எழிலை கூட்டி வரச் சொல்கிறாள்  அதேபோல் ஜெனியிடம்  வர்ஷாவை கூட்டிக் கொண்டு வர கூறுகிறார்.

இங்குதான் பிரச்சனை வெடிக்கிறது வர்ஷா முதலில் மேடைக்கு வந்து அனைவருக்கும் வணக்கத்தை கூறுகிறார். அடுத்ததாக வந்த எழில் வர்ஷாவை பார்க்கிறார் தன்னால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை தன்னுடைய குற்ற உணர்ச்சி தொண்டையை அடைக்கிறது அதற்கு காரணம் அமிர்தாவிடம் வாக்கு கொடுத்துவிட்டு இப்படி ஒரு காரியத்தை செய்கிறோம் என்று எழில் குற்ற உணர்ச்சியில் மிதக்கிறார்.

ஐயர் மாப்பிள்ளையின் அம்மா அப்பா வந்தாச்சா என்ன கேட்கிறார் உடனே வந்தாச்சு என கூறிவிட்டு எழில் அம்மா மேலே வா அம்மா என அழைக்கிறார் அந்த நேரத்தில் கோபியும் ராதிகாவை மேடைக்கு வா என அழைக்கிறார் இங்கு தான் வெடிக்கிறது பிரச்சனை. எழில் தன்னுடைய அம்மா பாக்கியலட்சுமியை மேடைக்கு வா என அழைக்கிறார் ஆனால் கோபியோ இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட ராதிகாவை அழைக்கிறார்.

இது எங்க போய் முடியப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.