Baakiyalakshmi : இன்றைய எபிசோடில் பழனிச்சாமியின் அம்மா பழனிசாமிகிட்ட உனக்கு பாக்யாவை பிடிச்சிருக்கான்னு சொல்லு நான் அவங்க வீட்ல பேசி உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று கேட்கிறார் அதற்கு பழனிச்சாமி அம்மா உனக்கு எத்தனை தடவை சொல்றது..
நாங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள், அவங்க மனசுலையும் ஏதும் இல்ல நீ தேவை இல்லாம அவங்க வீட்ல போய் ஏதாவது பேசி வைக்காதே என்று சொல்லுகிறார். அடுத்து இனியா போனில் பிரெண்ட்ஸ் உடன் சாட் செய்து கொண்டிருக்கிறார் அப்பொழுது ஈஸ்வரி ஃபோனை பிடுங்குகிறார் அதற்கு இனியா கோவமா போன குடுங்க பாட்டி என்று கேட்க உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது உன் கோபத்தை குறைக்க மூச்சுப் பயிற்சி பண்ணு என சொல்கிறார்.
அடுத்து ஈஸ்வரி வீட்டில் உள்ள அனைவரையும் ஒரு கசாயம் ஒன்றை குடிக்க சொல்லுகிறார். அடுத்து பாக்யாவும் செல்வியும் வீட்டுக்கு வருகின்றனர். அப்போது என்ன ரெண்டு பேரும் ஒண்ணா வீட்டுக்கு வரீங்க என்று கேட்க மார்க்கெட் போக வேண்டியது இருந்தது அதனாலதான் செல்விய கேன்டினில் இருந்து அப்படியே வர சொல்லி திங்ஸ் எல்லாம் வாங்கிட்டு வரோம் என்று பாக்கியா சொல்லுகிறார்.
உடனே ஜெனியும் அமிர்தாவும் வீட்டில் பாட்டி கசாயம் குடிக்க சொன்ன விஷயத்தை பாக்கியாவிடம் சொல்கின்றனர். பிறகு நைட்டு தூங்கும் பொழுது இனியா பாக்யாவிடம் உனக்கு அதிக வேலை இருக்கு இல்லம்மா வீட்டு வேலை, கேண்டின், காலேஜ் என இதுல ஏதாவது ஒன்ன நிறுத்திடமா என்று சொல்லி நீ காலேஜ் போறத நிறுத்திடுமா என சொல்லுகிறார்.
எல்லாருக்குமே பல கனவு இருக்கு ஆனா அது எல்லாமே நிறைவேறுதா என்று சொல்ல.. இதெல்லாம் நீ பேசுற மாதிரி இல்லையே யாரு உனக்கு சொல்லி கொடுத்தா உங்க அப்பா சொன்னாரா என பாக்கியா கேட்கிறார். மேலும் பாக்யா நான் காலேஜ் போறது தப்புன்னா உங்க அப்பா எப்பவோ காலேஜ் படிக்கும் போது ராதிகாவா பார்த்தாரு..
அந்த கனவ அப்படியே நிறுத்த வேண்டியதுதானே இந்த வயசுல ராதிகாவை கல்யாணம் பண்ணது கரெக்டா என கேட்கிறார். நான் காலேஜ் போறதால யாருக்கும் எந்த பாதிப்பும் வரல ஆனா உங்க அப்பா ராதிகாவ கல்யாணம் பண்ணதால எவ்வளவு பிரச்சனை நடந்தது உனக்கே தெரியும் இல்லை இனியா என்று பாக்கியா பேசிக் கொண்டிருக்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.