பாக்கியலட்சுமி சீரியலில் செகரட்டரி எலக்சனுக்கு பாக்யாவும் ராதிகாவும் போட்டி போடுகிறார்கள் எலக்ஷனில் நிற்கும் ராதிகா பேசும் பொழுது ஒரு குடும்பத்திற்கு சமைச்சு போட்டு பார்த்துக்கொள்வது ஏரியாவை மெயின்டன் பண்றதும் ஒன்னு கிடையாது பாக்கியா அதுக்கு படிப்பறிவு தேவை என்னோட ஆபிஸ்ல எனக்கு கீழ 12 பேர் வேலை பாக்குறாங்க என்னால இந்த ஏரியா செக்கரட்டரி வேலையையும் ஈசியா பண்ண முடியும் என ராதிகா கூறுகிறார்.
இதனைக் கேட்டவுடன் பாக்யா காண்டாகிறார் உடனே ராமமூர்த்தி இதற்கு பதில் கூற முற்படுகிறார் உடனே பாக்யா அவரை தடுத்து நிறுத்துகிறார் பின்னர் செகரட்டரியும் நீங்க தான் ஜெயிப்பீங்க மேடம் என ராதிகாவிடம் கூறுகிறார் உடனே மீட்டிங் முடிகிறது மீட்டிங் முடிந்ததும் செல்வி வீட்டிற்கு சென்று ஈஸ்வரி இடம் நடந்த விஷயங்கள் அனைத்தையும் கூறுகிறார். கோபி சார் பாக்யா அக்காவிற்கு எதிராக ராதிகாவை நிற்க வைத்துக் கொண்டு அந்த பேச்சு பேசுறாரு அந்த ராதிகாவும் அக்காவை படிக்கலன்னு நக்கலாக பேசுகிறார் என கூறுகிறாள்.
இதனை கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரி ஜெனி செழியன் என அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் உடனே ஈஸ்வரி இதெல்லாம் நமக்கு தேவையா அதனாலதான் நான் ஆரம்பத்திலேயே வேண்டாம் என்று கூறினேன் என கூறுகிறார் உடனே பாக்கியம் இனி மேலும் குட்ட குட்ட குனிய முடியாத அத்தை என்ன ஆகுதுன்னு பார்க்கலாம் எனக் கூறுகிறார் எழிலும் கண்டிப்பா நீங்க தான் ஜெயிக்கணும் எனக் கூறுகிறான்.
இந்த தேர்தலில் ஜெயித்து கோபி ராதிகா பேசிய பேச்சுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என பாக்கியா நினைக்கிறார் பின்பு பாக்யா லோன் விஷயமாக பேங்கை தேடி செல்கிறார் அங்கு கோபியின் டாக்குமெண்ட் இல்லாமல் அவரால் லோன் வாங்க முடியவில்லை அதனால் தன்னுடன் வேலை பார்க்கும் பெண்களிடம் புலம்புகிறார் அவர்களும் நம்மால் தனியாக எதுவும் பண்ண முடியாது என கூறி விடுவதால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி நிற்கிறார் பாக்யா.
மறுபக்கம் ராமமூர்த்தி கோபி வீட்டில் இருந்து கொண்டு பாக்யா எலக்ஷனில் நிற்பதற்காக நோட்டீஸ் அடிக்க ரெடி செய்து கொண்டிருக்கிறார். அதனை பார்த்து கோபி இது என்னோட ராதிகாவோட வீடு உங்க மருமகளுக்கு வேலை பார்க்க வேண்டும் என்றால் நீங்க அங்க போய் வேலையை பார்க்கலாம் என சத்தம் போடுகிறார், கோபி இவ்வாறு பேசியதை பார்த்த இனியாவும் ராதிகாவும் அதிர்ச்சி அடைகிறார்கள். வயசானவர் என்று கூட பார்க்காமல் கோபி கத்தியது ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள்.