Baakiyalakshmi : இன்றைய எபிசோடில் இனியா அம்மா காலேஜ் போற விஷயத்தை நான் பாட்டி கிட்ட சொல்றேன் என சொல்வதற்கு எழிலும் பாக்யாவும் இன்னும் கொஞ்ச நேரத்துல நாங்களே சொல்ல போறோம் அதற்கான பிளான் எல்லாம் போட்டு விட்டோம் என்று சொல்வதைக் கேட்காமல் இனியா பாட்டி கிட்ட சொல்லுவேன் என்று சொல்லும் பொழுது பாட்டி அங்க வந்து ஏன் இனியா இவ்வளவு கோபமா இருக்க, அம்மா கிட்ட கோபப்படக்கூடாது என சாந்தமாக சொல்கிறார்.
அதனால் இனியா சொல்ல வந்ததை சொல்லாமல் நிற்கிறார் பிறகு அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடும் போது மதியத்துக்கு என்ன லஞ்சமா என்று எழில் கேட்பதற்கு சிக்கன் செஞ்சி வச்சிருக்கேன் என பாக்கியா சொல்வதைக் கேட்டு ஈஸ்வரி சிக்கனா ஒரு உயிரைக் கொண்டு நம்ம சாப்பிடற..
நான் அசைவம் சாப்பிடுறதா இல்ல எனக்கு தேவையான சாப்பாடு நானே இனி சமைச்சு சாப்பிடுகிறேன் என்று ஈஸ்வரி சொல்கிறார். அடுத்து பாக்கியா காலேஜ் போற விஷயத்தை பாட்டியிடம் சொல்வதற்காக எழில் பாட்டியிடம் இந்த வீடியோவை பாருங்களேன் அம்மா உங்களை பத்தி பேசி இருக்காங்க பாட்டி என்று போனில் ஒரு வீடியோ காமிக்கிறார்.
அதில் பாக்கியா எனக்கு எல்லாமே எங்க அத்தை தான் எங்க அத்தையோட சப்போர்ட்டால தான் நான் கேட்டரிங் பிசினஸ் ஆரம்பிச்சேன் சமையல் காண்ட்ராக்ட் எடுக்கிறேன் இங்கிலீஷ் கிளாஸ் போறேன் என்று சொல்கிறார் அதற்கு அந்த பேட்டி எடுப்பவர் நீங்கள் காலேஜ் போக உங்க அத்தை சமாதிப்பாங்களா என்று கேட்க..
எங்க அத்தை சம்மதம் சொல்லுவாங்க என பாக்யா சொல்கிறார் இதை கேட்டு ஈஸ்வரி காலேஜ் அப்படின்னு யோசிக்கிறார். பிறகு பாக்யாவை கூப்பிடு ஈஸ்வரி என்ன காலேஜ் சேர்ந்துட்டியா என்கிட்ட உனக்கு சொல்லணும்னு தோணுல இல்லை என்று கேட்க ஆமா அத்தை நான் காலேஜ் சேர்ந்துட்டா உங்களுக்கு பிடிக்கலைன்னா சொல்லிடுங்க..
நான் டீசி வாங்கிடுறேன் காலேஜ் போகல என கேட்கிறார் ஆனால் ஈஸ்வரி காலேஜ் போ. எனக்கு சம்மதம் தான் என்று சொல்லிவிட்டார் இதனால் எல்லாரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மேலும் ஈஸ்வரி பாக்யாவை பற்றி பெருமையாக பேசி வீடியோவும் கொடுக்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.