அம்மா நீ இப்படி பண்ணிக்கிட்டு இருந்தா.. பாட்டியிடம் போட்டுக் கொடுப்பேன் மிரட்டும் இனியா.! பரபரப்பாக இருக்கும் பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடு

Baakiyalakshmi
Baakiyalakshmi

Baakiyalakshmi : இன்றைய எபிசோடில்.. இனியா அம்மா காலேஜ் போற விஷயத்தை பாட்டி கிட்ட நானே சொல்றேன் என்று சொல்கிறார். அதற்கு ஜெனி, எழில், அமிர்தா மூன்று பேரும் நீ பாட்டிகிட்ட சொல்ல வேணாம் என்று சொல்கின்றனர். அடுத்து எழில் அம்மாவுக்கும் இன்னும் பாட்டி வந்த விஷயம் தெரியாது அதனால நான் காலேஜில் போய் அம்மாகிட்ட பாட்டி வந்த விஷயத்தை சொல்லிட்டு அழைச்சிட்டு வரேன் என்று கிளம்புகிறார்.

பாக்யாவும் கிளாஸ் முடிஞ்சு வெளியே வந்ததும் எழில் அங்கு வருகிறார். வாம்மா வீட்டுக்கு போகலாம் என்று கூப்பிடுகிறார். பாக்கியா என்ன அவசரம் என்று கேட்க பாட்டி வீட்டுக்கு வந்துட்டாங்க நீ காலேஜ் போற விஷயத்தை அவங்க கிட்ட எப்படி சொல்றது என்று கேட்க பாக்கியா நாளைக்கு தான் வருவாங்கன்னு நினைச்சு நான் அதை பத்தி யோசிக்கவே இல்ல..

இன்னைக்கு காலேஜ் போற விஷயத்தை சொல்ல வேண்டாம் நாளைக்கு சொல்லிக்கலாம் என்று பாக்யா சொல்கிறார். பாக்கியா வீட்டுக்கு வந்தது ஈஸ்வரி எங்க பாக்கியா போன நான் வந்து எவ்வளவு நேரம் ஆகுது என்ன பேக் எல்லாம் மாட்டி இருக்க என்று கேட்க எழில் உடனே அது என்னுடைய பேக் தான் பாட்டி என்று சமாளித்து விடுகிறார்.

பிறகு பாட்டி வீட்டில் மூலிகை தண்ணீர் தான் குடிக்க வேண்டும் பித்தளை பானையில் தண்ணீர் வைத்து தான் குளிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி வருகிறார் மேலும் எல்லோரும் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திரியுங்கள் உங்களுக்கு நான் யோகா சொல்லி தருகிறேன் என்று சொல்கிறார்.

இதைக் கேட்டு செழியன் பிரம்ம முகூர்த்தம் என்றால் நாலரை மணியா பாதி நைட்ல என்னால் எழுந்திருக்க முடியாது என்ன ஆள விடுங்க என்று கிளம்புகிறார். அடுத்து செல்வி அங்கு வருகிறார் செல்வியையும் ஈஸ்வரி தினமும் நீயும் பிரம்ம முகூர்த்தத்தில் வந்துவிடு என்று சொல்கிறார்.

அடுத்த நாள் காலையில் பாக்யா சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது இனியா அம்மா இன்னைக்கு நீ காலேஜ் வருவியா என்று கேட்கிறார் அதற்கு பாக்கியா ஆமா வருவேன் காலேஜ் சேர்ந்து இரண்டாவது நாளே லீவு போடுறதா என்று கேட்க நீ காலேஜ் வராதம்மா என் பிரெண்ட்ஸ் எல்லாம் என்னை கிண்டல் பண்றாங்க என்று இனியா சொல்கிறார்.

அதற்கு பாக்கியா உங்க பிரண்ட்ஸ் கிண்டல் பண்றாங்களா இல்ல உனக்கு பொறாமையா இருக்கா நான் காலேஜ் வரது நான் வருவேன் தாண்டி என்று சொல்ல இனியா பாட்டி கிட்ட சொல்றேன் பாட்டிக்கு இந்த விஷயம் தெரிஞ்சா நீ வர முடியாது இல்ல என்று இனியா சொல்கிறார் இதை கேட்டு அனைவரும் ஷாக் ஆகின்றனர் இதோடு இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.