Baakiyalakshmi : இன்றைய எபிசோடில் ஈஸ்வரி வீட்டுக்கு வந்ததும் ஆளே மாறிவிட்டார். வீட்டில் உள்ள அனைவரும் ஈஸ்வரையைப் ஆச்சரியமாக பார்க்கின்றனர். அமிர்தா ஈஸ்வரியிடம் குடிக்க டீ கொண்டு வரட்டுமா பாட்டி என்று கேட்க ஈஸ்வரி நான் டீ காபி எல்லாம் இப்ப குடிக்கிறது இல்ல துளசி தீர்த்தம் இருந்தால் கொண்டு வா என்று சொல்கிறார்.
இப்படி சாமியார் போல் மாறியதற்கு என்ன காரணம் என்று ராமமூர்த்தி கேட்பதற்கு ஈஸ்வரி நான் காசிக்குப் போன இடத்தில் ஒரு சாமியார் வாழ்க்கை என்பது என்னன்னு எனக்கு புரிய வச்சாரு என்று சொல்கிறார். அடுத்து பாக்யா முதல் நாள் கிளாசுக்கு வந்துட்டாங்க டீச்சர் ஃபர்ஸ்ட் டே உங்களை அறிமுகப்படுத்திக்கோங்க என்று சொல்கிறார் அதற்கு அனைவரும் அவர்கள் பெயர்களை சொல்கின்றனர்… அடுத்து கேண்டினில் ராதிகா செல்வியை கூப்பிட்டு சாப்பிட என்ன இருக்கு என்று கேட்டுவிட்டு தோசை ஆர்டர் செய்கிறார்.
அந்த நேரம் பார்த்து கேஸ் தீர்ந்து போய் வேற சிலிண்டர் மாற்றி நேரம் ஆகிவிட்டது. 15 நிமிடம் கழித்து தான் ராதிகாவிற்கு தோசை வந்தது அதனால் டென்ஷன் ஆனா ராதிகா இப்படித்தான் வேலை பாப்பிங்களா, நாங்க எல்லாம் கரெக்டா செய்வோம் என்று சுத்தி கொண்டிருக்கும் பாக்யா எங்க என்று செல்வி இடம் ராதிகா கேட்கிறார். அதற்கு செல்வி ஓனர் வேற வேலையா வெளிய போயிருக்காங்க..
அவங்க இல்லனாலும் நாங்க கரெக்டா தான் வேலை செய்கிறோம் என்று சொல்கிறார். அடுத்து பாக்யாவை பார்ப்பதற்காக பழனிச்சாமியும் அவரது அம்மாவும் காலேஜுக்கு வந்திருக்கின்றனர். இவர்களைப் பார்த்த பாக்யா இங்க என்ன வேலையாக வந்து இருக்கீங்க என்று கேட்க பழனிச்சாமியின் அம்மா உன்ன பாக்க தான் வந்தோம்..
காலேஜ் சேர்ந்து இருக்க என்று பழனிச்சாமி சொன்னான் ரொம்ப சந்தோஷமா இருந்தது அதனால தான் பாத்துட்டு போலாம்னு வந்தோம் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அடுத்து வீட்டில் இனியா, ஜெனி, அமிர்தா, எழில் போன்றவர்கள் பாட்டி வந்த கெட்டப்பை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அம்மா பாட்டியின் கெட்டபை பார்த்தால் ஷாக் ஆகிடுவாங்க என்று எழில் சொல்வதற்கு..
இனியா அம்மாவை பார்த்து பாட்டியும் ஷாக் ஆகு வாங்க ஏன்னா அம்மா காலேஜ் போற விஷயம் இன்னும் பாட்டிக்கு தெரியாது இல்ல என்று சொல்கிறார் இதற்கு ஜெனி, அமிர்தா, எழில் போன்றவர்கள் ஆமாம் இதை யோசிக்காமல் போயிட்டோமே என்று நினைக்கின்றனர் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.