பாக்கியாவை திருமணம் செஞ்சுக்கோ பழனிச்சாமியின் அம்மா.. பாய் ப்ரெண்ட் வச்சிப்பேன் திமிராக பேசும் இனியா.

Baakiyalakshmi serial
Baakiyalakshmi serial

Baakiyalakshmi : பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில்.. கோபி வந்து பழனிச்சாமியின் அம்மாவிடம் பேசியதை பழனிச்சாமி வந்ததும் அவங்க அம்மா சொல்கிறார் அவங்க பழனிச்சாமி கிட்ட பாக்யாவை உனக்கு ரொம்ப பிடிக்கும் தான பேசாம பாக்கியலட்சுமிய கல்யாணம் பண்ணிக்கிறியா என்று கேட்கின்றனர்.

அதற்கு பழனிச்சாமி நாங்க ரெண்டு பேரும் நல்ல பிரண்ட்ஸ் அவ்வளவு தான் அவங்களும் அப்படித்தான் நினைக்கிறாங்க.. அதனால யார் எது சொன்னாலும் நம்பாதே என்று அவங்க அம்மாவிடம் சொல்லி விடுகிறார். அடுத்து நாளை காலேஜ் போவதற்கு இனியாவும் பாக்யாவும் ஷாப்பிங் போயிட்டு வந்திருக்கின்றனர்.

இருவரும் அவர்கள் வாங்கிய பேக் மற்றும் திங்ஸ் போன்றவற்றை போட்டி போட்டுக் கொண்டு பார்த்து வருகின்றனர் அப்போது இனியா பாக்யாவிடம் நான் எது பண்ணாலும் நீயும் பண்ணுவியாமா என கேட்க ஆமாடி நானும் பண்ணுவேன் என சொல்றாங்க அதற்கு இனியா நான் காலேஜ்ல ஃபர்ஸ்ட் மார்க் வாங்குவேன் நீயும் வாங்குவியா என கேட்க பாக்யாவும் நானும் வாங்குவேன் என்று சொல்கிறார்.

அடுத்து இனியா நான் காலேஜ்ல பாய் பிரண்ட் பிடிப்பேன் எனக் கேட்பதற்கு பாக்கியா கோபப்பட்டு உனக்கு புடிச்ச கோர்ஸ் உங்க அப்பா கிட்ட சண்டை போட்டு சேர்த்து விட்டு இருக்கேன் நல்லா படிச்சு வேலைக்கு போற வழிய பாரு பாய் ஃப்ரெண்ட் எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் என சொல்றாங்க உடனே இனியா நான் சும்மா சொன்னேன் என்று சொல்கிறார்.

கோபி வீட்டுக்கு வந்ததும் ராதிகாவிடம் பாக்யாவை பார்க்க இங்கிலீஷ் கிளாசுக்கு போனேன் என்று சொல்றதும் உடனே ராதிகா நீங்க பாக்கியாவ ஃபாலோ பண்றத விட மாட்டீங்களா அவங்க கிட்ட போய் அவமானப்பட்டு வரீங்களே திருந்தவே மாட்டிங்களா என திட்டுகிறார்.. அடுத்த நாள் காலையில் இனியா காலேஜ்க்கு கிளம்பி விட்டார்.

வீட்ல இருக்குற எல்லோரும் சாமி கும்பிட்டு இனியாவை காலேஜ் அனுப்பி வைக்கிறாங்க. இனியா எழில் கூட பைக்ல போவதற்காக வெளியே போறாங்க அப்ப வெளிய பாத்தீங்கன்னா கோபிக்கு காரோட வந்து வெயிட் பண்ணிட்டு இருக்காரு.. இதோட இந்த எபிசோடு முடிவடைந்துள்ளது அடுத்த வார எபிசோடில் இனியா யார் கூட முதல் நாள் காலேஜ் போவார் என்பதை பார்ப்போம்..