Baakiyalakshmi serial : இன்றைய எபிசோடில் பாக்கியாவிடம் லோபிகா மற்றும் பழனிச்சாமி இருவரும் இங்கிலீஷ் கிளாஸ்ல நாங்க ரெண்டு பேரும் பண்ண வேலையாள தான் கோபி உங்ககிட்ட சண்டை போடுற மாதிரி ஆயிடுச்சு எங்களை மன்னிச்சிடுங்க என்று கேக்குறாங்க..
அதுக்கு பாக்கியா இன்னைக்கு இது நடக்கலனாலும் அவர் வேற ஒரு காரணத்தை வைத்து சண்டை போட தான் போறாரு அதெல்லாம் ஒரு விஷயமே இல்ல நான் எல்லாத்தையும் கூலா சமாளிச்சுப்பேன் என்று சொல்றாங்க.. அடுத்து கோபி நேரா பழனிச்சாமி வீட்டுக்கே போய் அவங்க அம்மாவ பார்த்து பேசணும்னு போறாரு..
அங்க பழனிச்சாமி அம்மா கிட்ட உங்க பையன் ஒரு பொண்ணு கூட சுத்திட்டு இருக்காரு என்று சொல்வதற்கு சந்தோஷப்பட்டு அப்படியா யார் அந்த பொண்ணு என்று சொல்லுங்க பழனிச்சாமிக்கு கல்யாணம் பண்ணி வச்சுடும் என கேட்கிறாங்க இதுக்கு கோபி என்ன இந்த அம்மா இப்படி பேசுறாங்க என்று யோசிச்சிட்டு உங்க பையன் என் பொண்டாட்டி பாக்கியா..
பின்னாடி தான் சுத்திகிட்டு வராரு என்று கூற பழனிச்சாமி அம்மா உங்களுக்கும் பாக்யாவுக்கு தான் எல்லாம் முடிஞ்சுச்சே என கூற கோபி அதனால என்ன டைவெஸ் ஆச்சுன்னா அவ எப்படியாவது போனா போறான்னு விட்டுரத அதெல்லாம் முடியாது உங்க பையன் கிட்ட சொல்லி வையுங்க இனிமே பாக்கியா கிட்ட பேச கூடாதுன்னு என்று கோபமா பேசிட்டு கோபி கிளம்பிடுகிறார்.
அடுத்து ஜெனியை பாக்குறதுக்காக அவங்க அம்மா வராங்க ஜெனியோட அம்மா இப்ப ஜெனிக்கு எட்டு மாசம் ஆகுது வளைகாப்பு நடத்தணும் என்று கேட்பதற்கு பாக்கியா ஈஸ்வரி அத்தை வரட்டும் கேட்டுட்டு ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்று கூறுகின்றனர்.
பின்பு ஜெனி அம்மா வீட்டுக்கு கிளம்பிடுறாங்க.. அடுத்து பழனிச்சாமி வீட்டுக்கு வந்ததும் பழனிச்சாமியோட அம்மா அந்த தம்பி வந்து இருந்தாரு என்று சொல்வதற்கு யாருமா அப்படின்னு கேட்க பாக்கியலட்சுமி மாமியாரின் மகன் என்று அந்த அம்மா சொல்றாங்க..
அதுக்கு பழனிச்சாமி கோபியா என்ன சொன்னாரு என்ன பத்தி ஏதாவது தப்பா சொன்னாரா என்று கேட்க உன்னையும் பாக்யாவையும் தான் சேர்த்து வச்சு ஏதோ சொன்னாரு என்று பழனிச்சாமியின் அம்மா கூறுகிறார் இதோடு இன்றைய எபிசோடு முடிவடைந்துள்ளது.