Baakiyalakshmi serial : டிஆர்பியில் டாப் லிஸ்டில் இருக்கும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில்… இங்கிலீஷ் கிளாசில் ஒரு டாஸ்க்காக பழனிச்சாமி பாக்கியாவிடம் ப்ரபோஸ் செய்துள்ளார். பாக்யாவை பார்த்து பழனிச்சாமி ஐ லவ் யூ என சொல்லும் பொழுது பாக்யாவின் முன்னாள் கணவர் கோபி அங்கு வந்து அதைப் பார்த்து டென்ஷன் ஆகிவிட்டார்.
பின்பு கோபி கீழே இறங்கி பாக்யவை பார்த்து பேசுவதற்காக காத்துக் கொண்டிருந்தார் அப்போது பழனிச்சாமி கீழே இறங்கி வந்தார். கோபி பழனிச்சாமியிடம் நீ பண்றது சரி இல்லை இந்த வயதில் உனக்கு காதல் தேவையா நீ ப்ரொபோஸ் பண்ண பாக்கியா தான் கிடைச்சாளா என கண்ணா பின்னானு திட்டுகிறார்.
பழனிச்சாமி எத பத்தி பேசுறாருன்னு தெரியாம யோசிக்கிறாரு அப்புறம் ப்ரொபோஸ் பண்ணதை பத்தி கேக்குறீங்களா அது ஒரு டாஸ்க்காக சும்மா பண்ணது அப்படின்னு சொல்றாரு. ஆனா இத கோபி ஏத்துக்காம பழனிச்சாமியை திட்டிட்டு கிளம்புறாரு.. அப்புறம் ரோட்ல பாக்யாவும் கோபியும் நேராக எதிரே எதிரே மோதிக்கிறாங்க.
காரவிட்டு கீழே இறங்கி வந்த கோபி பாக்யாவை பார்த்து கண்ணு தெரியாதா ஒழுங்கா வரமாட்டியா என திட்டுவதற்கு பாக்யாவும் பதிலுக்கு திட்டுறாங்க அப்புறம் கோபி பாக்யாகிட்ட உனக்கு அந்த பழனிசாமி கூட என்ன பேச்சு அவன் கூட சுத்திகிட்டு இருக்க அவன் உனக்கு ப்ரொபோஸ் பண்றான் இந்த வயசுல இதெல்லாம் உங்களுக்கு தேவையா அப்படின்னு கேக்குறதுக்கு..
கிளாஸ்ல நடந்த விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும்? நீங்க என்ன வேவு பார்த்துட்டு இருக்கீங்ளா அப்படின்னு பதிலுக்கு பாக்கியாவும் திட்டுறாங்க.. அங்க பக்கத்துல இருக்குற எல்லாம் கோபியும் பாக்யாவும் சண்டை போடுறத நின்னு வேடிக்கை பாக்குறாங்க இன்னொரு பக்கம் பழனிச்சாமியும் லோபிகாவும் கார்ல வராங்க அவங்களும் கார நிறுத்தி என்ன நடக்குதுன்னு பாக்குறாங்க..
பாக்யா மற்றும் கோபிக்கிடையே வாக்குவாதங்கள் போய்க்கொண்டிருக்கும் போது போலீஸ் அங்கு வந்து என்ன உங்க ரெண்டு பேருக்கும் பிரச்சனை ரோட்டுல நின்னு சண்டை போட்டுகிட்டு இருக்கீங்கன்னு கேக்குறதுக்கு கோபி இவங்க என் ஒய்ஃப் தான் பேசிட்டு இருக்கேன் என சொல்றாரு ஆனா பாக்கியா இவர் யாருன்னே எனக்கு தெரியாது அடிக்கடி இப்படித்தான் வந்து சண்டை போடுறாரு என சொல்லிவிட்டு பாக்கியா சென்று விடுகின்றார்.
போலீஸ் கோபியிடம் இனிமே அந்த பொண்ணு கிட்ட எந்த பிரச்சனையும் பண்ண கூடாது என சொல்லிவிட்டு கோபியிடம் பேப்பரில் சைன் வாங்கிட்டு கோபியை போக சொல்றாங்க.. கோபி பாக்கியா நம்மளை யாருன்னு தெரியாதுன்னு சொல்லிட்டு போய்ட்டாலே என தனியா பொலம்பிட்டு இருக்காரு இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.