ராதிகாவுக்காக அம்மாவையே எதிர்த்து பேசிய கோபி.! அப்பா என்று கூட பார்க்காமல் அடிக்கப் போன செழியன்.! பரபரப்பாகும் பாக்கியலட்சுமி ப்ரோமோ…

baakiyalakshmi-serial
baakiyalakshmi-serial

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்துள்ளது இந்த நிலையில் இன்றைய எபிசோடில் ராதிகாவை ஈஸ்வரி டார்ச்சர் செய்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஈஸ்வரி கோபியே உன்ன டிவோர்ஸ் பண்ணி துரத்தி விடுவான் எனக் கூறுகிறார் அதேபோல் ராதிகாவும் உங்க வாயாலயே என்ன மருமகள் என சொல்ல வைக்கிறேன் என சபதம் போடுகிறார்.

அதற்கு ஈஸ்வரி அப்படி ஒரு நிலைமை எனக்கு வந்தா என் நாக்கை வெட்டி தூக்கி எறிஞ்சிடுவேன் என கூறுகிறார். பாக்யாவையே டிவோர்ஸ் பண்ணுனவன் உன்னை டிவோர்ஸ் பண்ண எவ்வளவு நாள் ஆகப்போகுது. எப்ப பாரு நீ சண்டை போட்டுக்கிட்டு தானே இருக்க கண்டிப்பா உன்ன டிவோர்ஸ் பண்ணிட்டு அவன் இங்க இருப்பான் பாரு என சவால் விடுகிறார் ஈஸ்வரி.

இதனை கோபி இடம் ராதிகா சொல்லிவிடுகிறார் அதனால் கோபி பாக்கியாவை பற்றி தப்பாக ராதிகாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் அங்க போய் உங்களால் சொல்ல முடியுமா என ராதிகா கேட்க உடனே கோபி கீழே செல்கிறார்.

கீழே வந்த கோபி ஈஸ்வரி இடம் எப்ப பாரு ராதிகாவை திட்டிக்கிட்டே இருக்கீங்க பாக்யாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுறீங்க , அவ கிளாசுக்கு போறேன்னு எங்கேயோ தானே போயிட்டு வரா அந்த ஆளு கூட பழகிட்டு தானா வரா என எல்லார் முன்னாடியும் கோபி கூற உடனே எழில் ஆத்திரப்பட்டு என்னைய சொன்ன என கோபி சட்டையை பிடிக்கிறார்.

எழிலை தள்ளிவிட்டு கோபி சட்டையை செழியன் பிடிக்கிறான் அது மட்டும் இல்லாமல் இன்னொரு தடவை எங்க அம்மாவ பத்தி தப்பா பேசினா தொலைச்சிடுவேன் என கூறுகிறார் இதனால் பாக்கியா குடும்பமே அதிர்ச்சியில் இருக்கிறது.