Baakiyalakshmi serial promo November 30 : பாக்கியலட்சுமி சீரியல் சமீபத்தி எபிசோடுகளில் மழையால் பொருட்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது அதனால் அங்கு சமைக்க முடியாததால் பாக்கியா வருத்தத்தில் இருந்தார் அதற்கு ஆறுதல் சொல்லுவதற்காக பழனிச்சாமி வீட்டிற்கு வந்து பாக்கியாவுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது கோபி வீட்டிற்கு வந்து யாரும் இல்லாத நேரத்தில் இரண்டு பேரும் தனியா பேசிட்டு இருக்கீங்க உங்களுக்கு வெக்கமா இல்லையா என்று பாக்கியாவை கண்டபடி பேச பிறகு பாக்கியா இது என் வீடு யாரு இங்க இருக்கணும் நான் தான் முடிவு பண்ணனும் வீட்டை விட்டு வெளியே போங்க என்று கோபியை திட்டினார்..
ஜப்பானில் தொடர்ந்து 23 வாரங்கள் ஓடி வரலாற்று சாதனை படைத்த ஒரே தமிழ் திரைப்படம்.?
பிறகு செழியன் பழனிச்சாமி அங்கிள் வீட்டுக்கு வந்தப்ப நான் வீட்ல தான் இருந்தேன் அவர் ஃபர்ஸ்ட் என்கிட்ட தான் பேசினாரு எனக்கு ஒரு ஆபீஸ் கால் வந்துச்சு நான் பேச போய்ட்டா அப்புறம் தான் அம்மாகிட்ட பேசிட்டு இருந்தாரு இப்ப எதுக்கு அம்மாவை நீங்க தேவை இல்லாம சொல்லிட்டு இருக்கீங்க..
அவங்க உங்கள மாதிரி இல்லை என்று அம்மாவிற்காக கோபியிடம் சண்டை போட்டார், எழிலும் பாக்யாவிற்க்கு தான் சப்போர்ட் பண்ணினர். ராதிகா கூட கோபி கிட்ட அவங்க ஏதோ பண்றாங்க உங்களுக்கு என்ன என்று பாக்யாவிற்கு சப்போர்ட் பண்ணினார். இந்த நேரத்தில் பாக்கியலட்சுமி அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது.
அதில் ராதிகா பாக்யாவிடம் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் உங்களுக்கு ஒரு சப்போர்ட் தேவை, அதனால நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன, பழனிச்சாமி உங்களுக்கு நல்ல ஃப்ரெண்ட் அவரை கூட நீங்க கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொல்ல பாக்கியா நீங்க இப்ப கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமாவா இருக்கீங்க என்று ராதிகாவை பார்த்து கேட்கும் புரோமோ வீடியோ வெளியாகியிருக்கின்றன..