ஈஸ்வரியை ஏய் என மரியாதை இல்லாமல் பேசிய ராதிகா.! பொண்டாட்டி பேச்சை கேட்டுகிட்டு அம்மா என்று கூட பார்க்காமல் அசிங்கப்படுத்தும் கோபி.!

baakiyalakshmi-june-23
baakiyalakshmi-june-23

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் ஈஸ்வரி ராதிகாவை திட்டிக் கொண்டிருக்கும் பொழுது ராதிகாவின் அம்மா இங்கே என்ன சத்தம் ஓவரா இருக்கு என வருகிறார். அன்னைக்கு போலீஸ் சொல்லிட்டு போனது மறந்துடுச்சா மறுபடியும் போலீஸ் கூப்பிடனுமா என மிரட்டுவது போல் கேட்கிறார். நீ எந்த போலீஸ் வேணாலும் கூப்பிடு நானும் சொல்லுறேன் என ஈஸ்வரி கூறுகிறார் உன் உருட்டல் மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன் என ஈஸ்வரி பேச ராதிகாவின் அண்ணன் ராதிகா என்ன தப்பு செஞ்சா என கேட்க என்ன தப்பு பண்ணல எல்லா தப்பையும் செய்தது இவர்தான்.

குடும்பம் குழந்தை என சந்தோஷமாக இருந்த கோபியை ஏமாற்றி கல்யாணம் பண்ணது இவதான் இவளோட அண்ணன் தான இவ தப்பு பண்ணும் போது நீ கேட்க மாட்டியா குடும்ப குழந்தை சந்தோஷமாய் இருந்தவன கல்யாணம் பண்ணிக்க போறேன்னு இதெல்லாம் தப்புன்னு அன்னைக்கு நீ ஏன் சொல்லல என்பது போல் ஈஸ்வரி கேட்கிறார்.

நடந்ததே ஒரு அசிங்கப்புடிச்ச  கல்யாணம் இதுல தங்கச்சியை பார்க்க வந்திருக்கானா என பேச உடனே ராதிகா வார்த்தையை பார்த்து பேசுங்க என கையை நீட்டி பேசுகிறார் அசிங்க அசிங்கன்னு சொல்றீங்களே அசிங்கத்தை பத்தி நீங்க பேசலாமா. கூட வாழ முடியாதுன்னு சொன்ன உங்க பையனோட முன்னாள் மனைவியவே நீங்க கூட வச்சிருக்கீங்க அது அசிங்கமா இல்லையா. போலீஸ் வந்து சொல்லியும் வெளியே போகாம இருக்காளே பாக்கியா அவளுக்கு இது அசிங்கன்னு தெரியாதா. என வாய்க்கு வந்தபடி ராதிகாவின் அம்மா பேச அதற்கு பாக்யா நீங்க ரெண்டு பேரும் பேசிக்குறதுல என்னையும் இடையில் இழுக்கிறீர்கள் என்பது போல் கூறுகிறார்.

சண்ட வேணாம் அமைதியாக இருக்கலாம் என ராமமூர்த்தி கூற சண்டை போட்டால் தான் பிரச்சனை வருதுன்னு இவருக்கு தெரியுது உங்களுக்கு தெரியலையே என ராதிகாவின் அம்மா பேசுகிறார், எங்க அம்மா அப்பா ஏன் வந்தார்கள் என்று நீங்கள் கேட்க முடியாது என ராதிகா பேச ஆரம்பிக்கிறார் நீங்க யாரு அத கேட்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது.

மேலும் ராதிகா நீங்க இருக்கலாம் தப்பே இல்ல ஆனா இங்கே யார் யார் இருக்கணும்னு முடிவு பண்றதுக்கு உங்களுக்கு அதிகாரமே கிடையாது என்பது போல் கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் என்னுடைய சொந்தக்காரங்க நான் வீட்டுக்கு கூப்பிட்டு வருவேன் உங்களுக்கு விருப்பம் இருந்தா இங்க இருங்க அப்படி இல்லன்னா உங்க ஆளுங்கள கூப்பிட்டுகிட்டு வெளியில் போயிட்டே இருங்க ஐ டோன்ட் கேர் என்பது போல் கூறுகிறார்.

உடனே ஈஸ்வரி நான் ஏன் கிளம்பனும்  மொத்தமா வீட்ல உக்காந்து இருக்கீங்களா நீங்க தான் கிளம்பனும் என பேசுகிறார். அப்படியெல்லாம் சொல்ல முடியாது ஒரு போன் பண்ணா மொத்த குடும்பமும் கம்பி என்ன வேண்டிதான் என ராதிகாவின் அம்மா மிரட்டுகிறார். உடனே ஈஸ்வரி இப்படி ஒரு கல்யாணம் பண்ணிட்டு வந்த இவளுக்கே இவ்வளவு பேச்சு இவ ஒழுங்கா கல்யாணம் பண்ணிட்டு வந்திருந்தா என்ன பேச்சு பேசுவா என ஈஸ்வரி கூற ஈஸ்வரி பார்த்து ராதிகா ஏய் என கையை நீட்டி மிரட்டுகிறார். உடனே ராமமூர்த்தி ஏமா கொஞ்சம் கூட வயசுக்கு மரியாதை இல்லாம பேசுற என்ன திட்ட ஆரம்பிக்கிறார் அதன் பிறகு பாக்கியம் நான் உள்ள வர வேண்டாம் என்று தான் நினைச்சேன் வயசுக்கு மரியாதை கொடுக்காமல் இப்படியா பேசுவீங்க என ராதிகாவிடம் மல்லு கட்டுகிறார்.

அதுமட்டுமில்லாமல் அவங்க அப்படித்தான் பேசுவாங்க நீ கேட்டுட்டு தான் இருக்கணும் என்பது போல் பாக்கியா ராதிகாவை பார்த்து கேட்கிறார் .ஒரு பிரச்சனைன்னு வந்தா சமாதானப்படுத்த பாக்கணும் இப்படி தான் தூண்டி விடுவியா என கேட்க பிரச்சனைக்கு காரணம் உங்க வீட்டு அம்மா தான என ராமமூர்த்தியை பார்த்து ராதிகாவின் அம்மா கூறுகிறார் .ராதிகாவின் குடும்பம் வெளியே செல்கிறது உங்ககிட்ட பேசி பிரயோஜனமே இல்லை கோபி வரட்டும் என ராதிகாவும் செல்கிறார்.

கோபி வந்ததும் ராதிகா தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பிக்கிறார் இது யாரோட வீடு என்னோட வீடு தானே கோபி என கேட்க ஆமா உன்னோட வீடுதான் உங்க வீட்ல என்ன இருக்கக் கூடாதுன்னு சொல்றாங்க என பேச உடனே பாக்கியா ஏன் அத்தையை வீட்டை விட்டு வெளியே போக சொன்ன அதெல்லாம் என் மறைக்கிற மரியாதை இல்லாமல் பேசுனியே அதை ஏன் மறைக்கிறாய் என பாக்கியா கேக்க அதெல்லாம் கேட்க நீ யாரு என கோபி பாக்கியவை பார்த்து கேட்கிறார்.

ராதிகா இது யார் வீடு கோபி என கேட்க உன்னோட வீடுதான் ராதிகா உன்னோட வீடு தான் என கூற உடனே பாக்யாவை பார்த்து நான் பேசுனதுக்கு மன்னிப்பு கேக்கணுமா கோபி என ராதிகா கோபியை ஏற்றி விட உன்கிட்ட எதுக்கு பாக்யா ராதிகா மன்னிப்பு கேட்கணும் என கேட்க என்கிட்ட மன்னிப்பு கேட்க சொல்லவில்லை அத்தையை தப்பா பேசினதுக்கு தான் மன்னிப்பு கேட்க சொன்னேன் என்பது போல் கூறுகிறார்.நீங்க எப்படி இந்த வீட்ல இருக்க முடியும் உங்களை இங்கு இருக்கவே கூடாதுன்னு போலீஸ் சொல்லிட்டாங்க தானே என ராதிகா கூறுகிறார்.

அப்புறம் எப்படி நீங்க பேச முடியும் என்பது போல் கூற உடனே ஈஸ்வரி யார்கிட்ட என்ன பேசுற உன்னை எனக் கூறும்போது அத்தை நீங்க இருங்க நான் பேசிக் கொள்கிறேன் என பாக்யா பேசுகிறார். கொஞ்ச நாளா நீங்க ரெண்டு பேரும் போடுற நாடகத்தை பார்த்து பார்த்து எனக்கே அலுத்து போச்சு என சும்மா உங்க வீடு சொல்லிக்கிட்டு இருக்கீங்க இவர் விக்கிற வீட்டை வாங்குற உரிமை எனக்கு இருக்கு உரிமை உரிமைசொல்றீங்களே இந்த வீட்ல நீங்க ரெண்டு பேரும் இருப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது என எதிர் கேள்வி கேட்கிறார் பாக்யா.

நான் கேட்பேன் நான் கண்டிப்பா கேட்பேன் இந்த வீடு என்னோடது நீங்க வீட்டை விக்கிறீங்க நான் வாங்குறேன் இன்னும் வீட்டுக்கு 18 லட்சம் தான் கொடுக்கணும் அந்த 18 லட்சத்தை கொடுத்தா நீங்க ரெண்டு பேரும் என்ன செய்யப் போறீங்க என கேட்க 18 லட்சம் கொடுக்க முடியாது என கூறிக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் ஒரு மாதத்தில் 18 லட்சத்தை கொடுக்கிறேன் என சபதம் செய்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.