பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்திய எபிசோடில் ஈஸ்வரியை அரஸ்ட் செய்திருந்தார்கள் பிறகு ராதிகாவின் மகள் மயூ வந்து சாட்சி சொன்னதால்தான் அவர் வெளியே வந்தார்.
ஈஸ்வரி வெளியே வந்ததும் கோபி வீட்டிற்கு சென்று ஈஸ்வரியை பார்க்க செல்கிறார் அப்பொழுது ஈஸ்வரி தலையில் தண்ணீரை ஊற்றிக்கொண்டு நீ என் மகனே கிடையாது எனக்கு ஒரே ஒரு மகள் தான் அது பாக்கியா மட்டும்தான் எனக் கூறிவிடுகிறார்.
இதனால் கோபி மனமுடைந்து வீட்டிற்கு செல்கிறார் அப்பொழுது ராதிகா எவ்வளவு சாரி கேட்டுட்டு ஒரே ஒரு சாரி சொன்னதால் அனைத்து முடிந்து விடுமா என கேட்கிறார் கோபி. மற்றொரு பக்கம் ராதிகா எப்படி என் குழந்தையை கோர்ட்டுக்கு அழைத்துக் கொண்டு போகலாம் இதுவே இனியாவுக்கு இப்படி ஒரு நிலைமை இருந்தால் இதை நீங்கள் செய்வீர்களா என கேட்கிறார்.
இந்த நிலையில் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோ வீடியோவில் இனியா தன்னுடைய தோழிகளுடன் பப்புக்கு சென்றுள்ளார் அப்பொழுது அங்கு அவர் தோழி குடிக்க மாட்டேன் என கூறிவிட்டு தான் அழைத்து வந்தார் ஆனால் குடித்து விடுகிறார்.
எதுக்கெடுத்தாலும் எதுக்கு ஷாக்காகுற இதெல்லாம் ஒரு மேட்டரே கிடையாது டான்ஸ் ஆடலாம் என இருவரும் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் பொழுது பாக்யா இனியாவுக்கு கால் செய்து கொண்டிருக்கிறார். அப்பொழுது அவர் போனை எடுக்க மறுக்கிறார் பிறகு இனியாவை பார்த்து சீனியர் மாணவன் ஒருவர் செம அழகா இருக்கா என வர்ணித்துக் கொண்டிருக்க ஜூனியருக்கும் சீனியருக்கும் சண்டை வருகிறது.
உடனே இருவரும் சண்டை போட்டுக் கொள்ள அங்கு போலீஸ் வந்து இனியா மற்றும் மற்ற நபர்களை அரஸ்ட் செய்து அழைத்துச் செல்கிறார்கள் இனி பாக்யாவுக்கு அடுத்த தலைவலி வந்துவிட்டது இதிலிருந்து இனியா தப்பிப்பாரா பாக்யா காப்பாற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.