baakiyalakshmi : பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் வீட்டை ரெஜிஸ்டர் செய்வதற்கு ரிஜிஸ்டர் ஆபீஸ் இருக்கு வந்துள்ளார்கள் அப்பொழுது கோபி பாக்கியாவை பார்த்து மூணு முணுக்கிறார். அது மட்டும் இல்லாமல் எவ்வளவு நேரம் ஆகும் எனவும் ஆபீஸாரிடம் கேட்க டோக்கன் பிரகாரம் தான் செய்வோம் சார் என கூறுகிறார்கள். பிறகு வீட்டை என் பேருக்கு வேணாம் உங்க பேருக்கே ரிஜிஸ்டர் செய்து கொள்ளலாம் மாமா என பாக்கியா கூற இல்ல அதெல்லாம் முடியாது இவன் வந்து கோர்ட்டுக்கும் கேசுக்கு இழுத்தடிப்பான் அதனால உன் பெயரிலேயே இருக்கட்டும் என கூறுகிறார்.
பிறகு ரிஜிஸ்டர் செய்து விடுகிறார்கள் அனைவரும் வீட்டுக்கு வருகிறார்கள் அந்த சமயத்தில் எழில் கோபியை பார்த்து குடித்துவிட்டு வீட்டு பக்கம் வந்து விடாதீர்கள் அப்புறம் நல்லா இருக்காது என கோபியை பார்த்து மிரட்டுகிறார். வீட்டிற்கு வந்த ராமமூர்த்தி பாக்யா அவரவர்கள் வேலையை செய்து கொண்டிருக்கும் பொழுது எழில் வந்து வெளியே வாங்க என அழைத்துக் கொண்டு செல்கிறார்.
அங்கு பழைய பாக்கியலட்சுமி போர்டை எடுத்துவிட்டு புதிய போர்டை வைக்க கூறுகிறார். அந்த சமயத்தில் கோபி மற்றும் ராதிகா இருவரும் வருகிறார்கள் உடனே ராமமூர்த்தி போர்டை பாட்டுடா பேராண்டி வேகனாக என கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் இதோட வச்சு ஒரு போட்டோ எடு என கூற இன்னும் கோபிக்கு பற்றி எரிகிறது அது மட்டும் இல்லாமல் ராதிகாவும் டென்ஷன் ஆகிறார்.
கோபி என்னன்னு கேட்பதற்கு போகும்பொழுது ராதிகா வேண்டாம் இங்கே அசிங்கப்படத் தேவையில்லை என கூறுகிறார். உடனே இருவரும் கிளம்பி விடுகிறார்கள் அடுத்த காட்சியில் எழிலின் மாமனார் மற்றும் மாமியார் வந்துள்ளார்கள் அவர்களிடம் ராமமூர்த்தி பேசிக்கொண்டிருக்கிறார்.
அதேபோல் மற்றொருபுறம் ராதிகா கேண்டினில் தோசை ஆர்டர் செய்கிறார் ஆனால் செல்வி தோசையை மாற்றி வைத்து விடுகிறார். உடனே ராதிகா கோவப்பட்டு திட்டுகிறார் செல்வி சாரி கேட்டும் விடவில்லை அது மட்டும் இல்லாமல் அருகில் உள்ளவரும் இது சின்ன பிரச்சனை தானே இதுக்கு ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க என கூறுகிறார்.
பிறகு பாக்யா வந்தவுடன் என்ன வேணும்னே செய்றியா வந்த புதுசுல கரெக்டா செஞ்ச மாதிரி இருக்கு இப்ப என்ன திமிர்த்தன் அதிகமாயிடுச்சா என பாக்கியாவை பார்த்து ராதிகா கேட்கிறார். அது மட்டும் இல்லாமல் என்ன வீட்டை விட்டு துரத்தினில உன்னை இந்த கேண்டின விட்டு எப்படி துரத்துறேன்னு பாரு என சபதம் போடுகிறார். ஆனால் நான் இவ்வளவு கீழ்த்தனமா நடந்துக்க மாட்டேன் ஆனா இப்ப என்ன அப்படி நடந்துக்க வச்சிருக்க என்பது போல் பேசி விடுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.