விஜய் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்தான் திவ்யா கணேசன். அதே சேனலில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலிலும் இவர் நடித்து வருகிறார்.
ஆனால் ஜெனி என்ற கதாபாத்திரம்தான் இவருக்கான அடையாளமாக இருக்கிறது. இவர் தற்போது சக நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் ஒரு தகவல் இணையத்தில் உலா வருகிறது.
ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. ஏனென்றால் இது குறித்து திவ்யா எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. அதன்படி பாக்கியலட்சுமி சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் செழியனை தான் இவர் காதலிப்பதாக செய்திகள் பரவி வருகிறது.
முன்னதாக அந்த கேரக்டரில் செம்பருத்தி ஷபானாவின் கணவர் ஆரியன் நடித்து வந்தார். அதன் பிறகு விகாஸ் சம்பத் இப்போது நடித்து வருகிறார். இவரைத்தான் திவ்யா காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே இவருக்கு தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ் உடன் திருமணம் நடக்க இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது நின்று போனது. இந்த சூழலில் ஏற்கனவே திருமணம் ஆன விகாசை இவர் காதலிக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு விகாஷ் தன் மனைவியுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு முதல் திருமண நாள் பற்றி குறிப்பிட்டிருந்தார். அதனாலேயே ரசிகர்கள் இந்த தகவல் உண்மையா என திவ்யாவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.