25 வருட கனவை நினைவாகிய பாக்கியா.. தனது நண்பர்களுடன் கும்மாளம் அடிப்பதை பார்த்து கோப்பட்ட இனியா

Baakiyalakshmi
Baakiyalakshmi

Baakiyalakshmi : சின்னத்திரை டிவி தொலைக்காட்சிகள் அனைத்தும் போட்டி போட்டுக் கொண்டு பல வித்தியாசமான கதை அம்சம் கொண்ட சீரியல்களை கொடுத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களுக்கு ஃபேவரட் ஆகும்.

அந்த வகையில் விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் பல இல்லத்தரசிகளை கவர்ந்து பிரபலமாக ஒளிபரப்பாகி வருகின்றன. இதில் பாக்கியா கோபியின் விவாகரத்திற்கு பிறகு தனது ஆசையை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். இங்கிலீஷ் கிளாஸ், கேட்டரிங் பிசினஸ், சமையல் காண்ட்ராக்ட் என செய்து வந்த பாக்கியா தற்பொழுது காலேஜிலும் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் பாக்கியலட்சுமி அடுத்த வாரத்திற்கான ப்ரோமோவில் பாக்யா முதல் நாள் காலேஜ் எழிலுடன் செல்கிறார். அப்போது எழிலிடம் 25 வருடம் கழித்து என் காலேஜ் ஆசை நிறைவேறி இருக்கு என்று சொல்கிறார். பின்பு அதே காலேஜில் மார்னிங் கிளாஸ் முடிந்து வெளியே பிரெண்ட்ஸ் உடன் பேசிக் கொண்டிருக்கும் இனியாவை பார்த்து பாக்கியா பேசுகிறார்.

இனியாவின் நண்பர்களிடம் நான் தான் இனியாவோட அம்மா நானும் இங்கு தான் படிக்கிறேன் என்று சொல்வதும் இனியாவின் நண்பர்கள் விளையாடாதீங்க நிஜமாவா என்று கேட்கின்றனர் அதற்கு பாக்யா ஆமாம் என்று சொல்கிறார். இது இனியாவிற்கு அசிங்கமாக இருக்கிறது. உடனே இனியா எழிலை வா அண்ணா வீட்டுக்கு போகலாம் என்று கூப்பிடுகிறார்.

அப்பொழுது கோபியும் அங்கு வந்து இனியாவை பிக்கப் பண்ண காத்திருக்கிறார். அதனால் இனியா கோபியுடன் சொல்கிறார். கோபி இனியாகிட்ட என்ன உங்க அம்மாவும் நிஜமாவே காலேஜ் சேர்ந்துட்டாளா என்று கேட்க ஆமா அப்பா என்று சொல்கிறார் அடுத்து பாக்யா அவங்க கிளாஸ் ரூமுக்கு போகிறார்.