ரெண்டு கரண்டியும், நாலு பானையும் வச்சுக்கிட்டா நீ பிசினஸ் மேக்னட்டா.! வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் கோபி..

Baakiyalakshmi september 26 promo

Baakiyalakshmi promo september 26 : பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் அமிர்தாவின் அம்மா கணேஷ் வீட்டிற்கு வருகிறார் அப்பொழுது கணேசின் அப்பா அம்மாவை பார்த்து பேசிக் கொண்டிருக்கிறார் இப்பொழுது தான் அமிர்தா சந்தோஷமாக அவளுக்குன்னு ஒரு குடும்பம் இருக்கிறது இந்த சமயத்தில் கணேஷ் வந்திருக்கிறார் கொஞ்ச நாளைக்கு முன்னாடி வந்து இருந்தா நான் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பேன் இப்ப என்ன பண்றதுன்னு எனக்கே தெரியல என பேசிக் கொண்டிருக்கிறார்.

உடனே அமிர்தாவையும் நிலா பாப்பாவையும் பற்றி எதுவும் சொல்ல வேண்டாம் என கூறுகிறார் அந்த சமயத்தில் கணேஷ் வருகிறார் அமிர்தாவும் வந்திருக்கிறாரா என உள்ளே தேடிப் பார்க்கிறார் கணேசிடம் முகம் கொடுத்து பேசாமல் அமிர்தாவின் அம்மா சென்று விடுகிறார்.

அதே போல் பாக்கியாவும் ஈஸ்வரியும் ராதிகா கேபினுக்கு செல்கிறார்கள் உங்ககிட்ட கொஞ்சம் கேண்டின் பத்தி பேச வேண்டும் என கூற அதற்கு ராதிகா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு வெளியில கொஞ்சம் வெயிட் பண்ணுங்க எனக் கூற வெளியில் வெயிட் பண்ணுகிறார்கள் ரொம்ப நேரம் ஆகியும் கூப்பிடவில்லை பாக்கியவை வேண்டுமென்றே பழிவாங்குகிறார் ராதிகா.

பிறகு பாக்யா ராதிகாவை பார்த்து இந்த கேண்டின் நாங்க தொடர்ந்து பண்ணுகிறோம் எங்கள் ஆர்டர் கேன்சல் பண்ணிடாதீங்க நாங்க வேணும்னா கோடீஸ்வரன் சார் கிட்ட பேசுகிறோம் எனக் கூற அதற்கு ராதிகா கோடிஸ்வரன் சார் இங்க இல்லவே இல்ல ரெண்டு மாசத்துக்கு ஆபீஸ் என்னோட கண்ட்ரோல் தான் அவர் இப்ப யுஎஸ் போயிருக்காரு என பேசிக்கொண்டு இருக்கிறார் இத்துடன் எபிசோட் முடிந்தது. இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்தப் ப்ரோமோ வீடியோவில் பாக்கியாவை பார்த்து குட்மார்னிங் மேடம் கேண்டினை இழுத்து மூடிட்டாங்களா என நக்கலாக பேசுகிறார் கோபி.

ரெண்டு கரண்டி நாலு பானை இந்த மாதிரி நாலு பேர் இருந்தா பிசினஸ் பண்ணிடலாம்னு கிளம்பிட்டீங்களா இப்ப என்ன பண்ண போற பாக்கியலட்சுமி என சோகமா இருந்த பாக்கியாவிடம் வெறுப்பேத்துவது போல் கோபி பேச உடனே பாக்யா எதுவுமே நிரந்தரம் கிடையாது மிஸ்டர் கோபி என்னோட பிசினஸ் கண்டிப்பா என் கைக்கு வந்து ஆகும் என்ன பத்தி கவலைப்படவதை விட்டுட்டு உங்க வேலைய பாருங்க மிஸ்டர் கோபி  என தில்லாக பேசுகிறார் இத்துடன் ப்ரோமோ வீடியோ முடிகிறது.