விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் டி ஆர் பி எல் நல்ல ரேட்டிங் பெற்றுள்ள சீரியல் என்றால் பாக்கியலட்சுமி சீரியல் தான். இந்த சீரியலில் கோபி இல்லை என்றால் அவ்வளவுதான் சீரியலின் சுவாரசியம் குறைந்து விடும். அந்த அளவு கோபியை திட்டிக் கொண்டே மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த சீரியலை.
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி முதலில் பாக்யாவை திருமணம் செய்து கொள்வார் ஆனால் கடைசியாக பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொள்கிறார். அப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது ராதிகா மற்றும் கோபி இருவரும் பாக்கியா வீட்டிற்கு வந்து பெரும் அட்டூழியங்களை செய்து வருகிறார்கள். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை ரசிகர்கள் பெரும்பாலும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படி இருக்கும் நிலையில் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக நடித்து வரும் கோபி திடீரென ஒரு வீடியோவை வெளியிட்டு ஏதேதோ பேசியிருந்தார் அதில் முக்கியமாக நான் ஏமாந்து விட்டேன் இனி நான் சீரியலில் நடிக்கப் போவதில்லை அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என அந்த வீடியோவை கூறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்கள் வெளியேறிவிட்டால் நாங்கள் சீரியலையே பார்க்க மாட்டோம் நீங்கள் இருப்பதால் தான் இந்த சீரியலை பார்க்கிறோம் என பலரும் தங்களுடைய கருத்தை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வந்தார்கள்.
இந்த நிலையில் கோபியின் மனைவியாக நடித்து வரும் ராதிகா என்கின்ற ரேஷ்மா சமீபத்தில் சமூக வலைதளத்தில் ரசிகர்களிடம் உரையாடியுள்ளார். அப்பொழுது ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளார்கள் அதற்கு பதில் அளித்து வந்த ரேஷ்மா கோபி இந்த தொடரை விட்டு வெளியே செல்கிறார் எனக் கூறியுள்ளார்கள் ரசிகர்கள், அதற்கு ரேஷ்மா கோபி வெளியேறியது எனக்கு தெரியாது நானே பாக்கியலட்சுமி தொடரில் அடுத்து இருப்பனா என்பதை தெரியாது.?
மாற்றினால் இரண்டு பேரையும் மாற்றுவார்கள் எனக் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் கோபி மற்றும் ராதிகா இந்த சீரியலில் இல்லை என்றால் சுவாரஸ்யம் சுத்தமாக குறைந்து விடும் அதனால் இருவரையும் மாற்றாதீர்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.