நடு வீட்டில் இடிந்து போய் அழுது கொண்டிருக்கும் பாக்கியா.! அர்த்த ராத்திரியில் பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்கும் இனியா.! வெளியானது ப்ரோமோ வீடியோ.!

baakiyalakshmi-promo
baakiyalakshmi-promo

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. அதேபோல் இன்னும் பல சீரியல்கள் ரசிகர் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்துள்ளது அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இந்த சீரியலில் ஒவ்வொரு நாளும் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது.

அப்படி இருக்கும் நிலையில் கோபி குடித்துவிட்டு பாக்யா வீட்டிற்கு செழியன் அழைத்து வந்தார் அதுவே பாக்யா வீட்டில் பெரும் பூகம்பம் போல் வெடித்துள்ளது ஏனென்றால் கோபி இங்கே இருக்குமாறு ஈஸ்வரி கூறினார். அதெல்லாம் சரிப்பட்டு வராது என கிளம்பும் நேரத்தில் ராதிகா பெட்டி படிக்கை எடுத்துக்கொண்டு பாக்கியா வீட்டிற்கு வந்து விடுகிறார். அங்கு பெரும் வாக்குவாதம் நடைபெறுகிறது ராதிகாவும் என்னால் இங்கிருந்து போக முடியாது என் புருஷன் இருக்கும் இடத்தில் தான் நானும் இருப்பேன் என ஒரேடியாக பட்ரையை போட்டு விட்டார்.

ராதிகா கோபி தங்கி இருந்த ரூமுக்குள் சென்று பெட்டியை வைத்து விட்டு உட்கார்ந்து இருக்கிறார் கோபி எவ்வளவு கெஞ்சியும் ராதிகா வர முடியாது என மறுத்து விடுகிறார். அது மட்டும் இல்லாமல் கோபியிடம் இதுபோல் இனிமேல் செய்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் நான் தற்கொலை செய்து கொண்டால் உங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து பெயரையும் எழுதி வைத்துவிட்டு தான் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுகிறார்.

இதனால் கோபி பயந்து போய் ராதிகா இனிமே இங்கதான் இருப்பா நான் ஒன்னும் உங்களுக்கு வீட்டை எழுதி கொடுக்கவில்லை அதனால நாங்க இங்கதான் இருப்போம் என கூறிவிட்டு மேலே செல்கிறார். உடனே ஈஸ்வரி பாக்யாவை இனி நீ எங்கேயும் போகக்கூடாது என இங்கே தான் இருக்கணும் என சத்தியம் வாங்கிக் கொள்கிறார். இப்படியே போக வீட்ல இருக்கும் அனைவரும் அழுது கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் இன்றைய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. பாக்யா நடு வீட்டில்  உட்கார்ந்து கொண்டு அழுது கொண்டிருக்கிறார் அப்பொழுது இனியா திடீரென எழுந்து வந்து நீ ரொம்ப பாவமா டாடி தப்பு மேல தப்பு பண்ணிகிட்டே இருக்கிறார் ராதிகாவை  இங்க கூட்டிகிட்டு வந்திருக்கவே கூடாது அம்மா என இந்த வீடு டார்ச்சர் இருக்குன்னு நீ எங்கேயும் போயிட மாட்டல்லமா என அழுது கொண்டே பாக்யாவின் மடியில் இனியா படுத்து கொள்கிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.