விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர் மத்தியில் நன்கு பிரபலமடைந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது, இந்த சீரியலில் ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த எபிசோடில் ஜெனி கீழே வழுக்கி விழுந்து விடுகிறார் அவருக்கு தன்னுடைய வயிற்றில் இருக்கும் பாப்பாவுக்கு ஏதாவது ஆகிவிட்டதா என பயம் ஏற்படுகிறது. அந்த சமயத்தில் மேலே இருந்து இறங்கி வந்த ராதிகா ஜெனியை அழைத்து ஹாஸ்பிடலில் சேர்க்கிறார் அது மட்டும் இல்லாமல் பாக்யாவுக்கு போன் செய்து ஜெனி விழுந்து விட்டதையும் கூறுகிறார்.
ஹாஸ்பிடலுக்கு பதறி அடித்துக் கொண்டு வரும் செழியன் மற்றும் பாக்யா ஜெனியை பார்த்து நலம் விசாரிக்கிறார்கள், அத்துடன் அடுத்த காட்சியில் வீட்டிற்கும் கூட்டி கொண்டு வருகிறார்கள். பிறகு ராதிகா ஜெனி வந்துவிட்டாளா நல்லா இருக்காளா என கேட்க உடனே ஈஸ்வரி நீதான் அவளை தள்ளிவிட்டாயா என அவர் மீது பழி போடுகிறார். இத்துடன் எபிசோடு முடிவடைந்த நிலையில் தற்பொழுது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
இந்த ப்ரோம்மொ வீடியோவில் ராதிகா சமைப்பதற்காக சமையல் கட்டில் நின்று கொண்டிருக்கிறார் அப்பொழுது பாக்யா திடீரென ராதிகாவிடம் வந்து கையெடுத்து கும்பிட்டு நேத்து நீங்க செஞ்ச உதவிக்கு ரொம்ப நன்றி மேடம் ஹாஸ்பிடல் எல்லாம் சேர்த்து நாங்க வர வரைக்கும் கூடவே இருந்தீங்க அவ்வளவு ஈஸியா யாரும் இத செஞ்சிட மாட்டாங்க நான் சாதாரண ஹவுஸ் வைஃப் தான் உங்கள பார்த்தாலே எல்லாமே பாஸிட்டிவா இருந்தது அசால்ட்டா எல்லாத்தையும் ஹாண்டில் பண்ணிட்டு இருந்தீங்க.
அப்படிப் பார்த்த உங்களை எனக்கு இப்படி பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு நீங்க எல்லாத்தையும் இழந்து நிற்கிற மாதிரியே தோணுது ராதிகா என பாக்கியா ராதிகாவிடம் கூறுகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது. இனி வரும் எபிசோட்டில் ராதிகா மற்றும் பாக்கியா இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்களா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.