விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது அதிலும் ஒரு சில சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது, அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர், ஈரமான ரோஜாவே என ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்த சீரியல்களும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
அதிலும் இந்த சீரியலில் நடிக்கும் ஒரு சில கதாபாத்திரங்களை மக்கள் அவ்வளவு எளிதாக மறக்க முடியாத அந்த அளவு ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வைத்துள்ளார்கள் அது மட்டும் இல்லாமல் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள்.
என்னதான் சீரியல்களில் நடிகர் மற்றும் நடிகைகள் நடித்தாலும் ஆனால் டப்பிங் பெரிதாக கொடுப்பதில்லை ஏனென்றால் டப்பிங் நேரம் எடுக்கும் என்பதால் பலரும் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்கள் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் பல தொலைக்காட்சி சீரியல்களின் நாயகி களுக்கு டப்பிங் கொடுத்து வருகிறார் ஒருவர்.
சமீபத்தில் விஜய் தொலைக்காட்சி விருது நடைபெற்றது இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இதில் பல கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த விருது விழாவில் பல நடிகைகளுக்கு டப்பிங் கொடுக்கும் மீனா ரோஷினி கலந்து கொண்டார்.
விஜய் விருது விழாவில் கலந்து கொண்ட மீனா ரோஷினி பேசும்பொழுது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனத்திற்கும், பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கேரக்டருக்கும், பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியலட்சுமி கேரக்டருக்கும், ஈரமான ரோஜாவே சீரியலில் பிரியா கதாபாத்திரத்திற்கும் டப்பிங் பேசுகிறேன் என கூறியுள்ளார்.
இப்படி முக்கியமான கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசும் இவரின் குரல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது.