இங்கிலீஷ் கிளாசை தொடர்ந்து காலேஜ் போவதையும் நிறுத்திய பாக்கியா.. பாசிட்டிவாக பேசும் பழனிச்சாமி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடு

Baakiyalakshmi Octomber 02
Baakiyalakshmi Octomber 02

Baakiyalakshmi Octomber 02 :  இன்றைய எபிசோடில் இனியா நிலா பாப்பாவுக்கு சோறு ஊட்டிகிட்டு வீட்டு வாசலில் உட்கார்ந்து இருக்கும் பொழுது நிலாவை காணவில்லை அதனால் இனியா, பாக்யா மற்றும் அமிதா எல்லோரும் நிலாவை தேடிக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது நடிகர் சித்தார்த் நிலா உடன் வீட்டிற்கு வருகிறார். நிலவைப் பார்த்து அமிர்தா சந்தோஷப்படுகிறார்.

அடுத்து சித்தார்த்தை வீட்டில் உள்ளே அழைத்து உட்கார வைத்து பேசி கொண்டிருக்கின்றனர்.. அப்பொழுது நடிகர் சித்தார்த் என் பேரு ஈஸ்வரன் என் அண்ணன் பொண்ணு பேரு சுந்தரி, என்னை சித்தா என்று தான் கூப்பிடுவா, அவ எனக்கு ரொம்ப உயிரு என்று சொல்லிவிட்டு நீங்களும் உங்க குடும்பத்தோட சித்தாவ பார்க்க வரணும் என அவர் நடித்த படத்தை பற்றி பேசிவிட்டு கிளம்புகிறார்.

அடுத்து பாக்யா ஈஸ்வரியிடம் இனிமேல் நான் காலேஜ் போறத நிறுத்தலாம்னு இருக்கேன், என் வயசுக்கு என்ன பண்ணனுமோ அதை தான் நான் செய்யணும் என்று நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கு புரிஞ்சது, 43 வயசுல என் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல அம்மாவா உங்களுக்கு நல்ல மருமகளா மட்டும் நான் இருக்கேன் என்று சொல்கிறார்.

பிறகு பாக்யா வருத்தமாக இருப்பதால் எழில் பாக்யாவை ஒரு ரெஸ்டாரன்ட் இருக்கு அழைத்து சென்றுள்ளார் அங்கு எழில் பழனிச்சாமியையும் வர சொல்லி இருக்கிறார். இவரை ஏன் இங்க வர சொன்ன என்று பாக்கியா எழிலிடம் கேட்க நீ மனசு ரொம்ப வருத்தமாயிருக்க, உன் பிரண்ட்ஸோட பேசினா கொஞ்சம் நல்லா இருப்பேன்னு தோணுச்சு அதனால் தான் என்று எழில் சொல்லுகிறார்.

பிறகு பாக்யாவும் பழனிச்சாமியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஏன் திடீர்னு காலேஜ் போறத நிறுத்துனீங்க, இப்படி தான் இங்கிலிஷ் கிளாசையும் நிறுத்துனீங்க, டக்கு டக்குனு நீங்க எல்லா முடிவும் எடுக்குறீங்க என்று இரண்டு பேரும் பேசிக் கொண்டிருக்கின்றனர் இதோடு இந்த எபிசோட் முடிந்துள்ளது.