கோபி பேசிய வார்த்தை.. நீ என் புள்ளையே இல்ல என தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்ட ஈஸ்வரி… அத்தை இந்த தண்ணியை யார் கிளின் பண்ணுவா பாக்யாவின் மைண்ட் வாய்ஸ்…

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் மயூ ஈஸ்வரிக்கு சாட்சி சொன்னதால் ஈஸ்வரி வெளியே வந்து விடுகிறார் ஆனால் மயூவை ராதிகா மற்றும் கமலா இருவரும் திட்டுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் ராதிகா தன்னுடைய அம்மா கமலாவை பார்த்து  இப்போ உனக்கு சந்தோஷமா பொய் கேஸ் போட்டு என் மானத்தையே  வாங்கிட்டியே என ராதிகா கமலாவை திட்டுகிறார்.

அதற்கு எனக்கு மட்டும் என்ன தெரியும் நான் பின்னாடி இருந்து பாக்கலையே என பேசுகிறார் கமலா. அதேபோல் அடுத்த காட்சியில் ராதிகா தனியா உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது மயூ ராதிகாவிடம் சென்று பேசுகிறார். அப்பொழுது உன்னை எப்படி பாக்கியா அழைத்து வந்தார் என கேட்க நடந்த அனைத்தையும் மயூ கூறுகிறார். மேலும் மயூ பாக்கியா ஆன்ட்டி அழுதாங்க அதனால் தான் உண்மைய சொன்னேன் எனக் கூறுகிறார் அதற்கு ராதிகா எதற்காக எங்களிடம் சொல்லவில்லை என கேட்க நான் ஏதாவது சொன்னா நீங்க என்ன திட்டிடுவீங்க அதனால தான் சொல்லவில்லை எனக் கூறுகிறார்.

அதுமட்டுமில்லாமல் மயூ நீங்க தானே மம்மி உண்மையை பேசணும்னு சொல்லி இருக்கீங்க நான் உண்மைய தான் சொன்னேன் என  பேச ராதிகா மயூவை கட்டிப்பிடித்து அழுகிறார். மற்றொரு பக்கம் கோபி தன்னுடைய ஆதங்கத்தை நண்பனிடம் கொட்டி தீர்க்கிறார் அது மட்டும் இல்லாமல் நான் எப்படி எங்க அம்மாவா நம்பாம போயிட்டேன் எனக் கூறுகிறார்.

உடனே இனிமே ராதிகா வீட்டிற்கு செல்ல மாட்டேன் என கூறுகிறான். அது மட்டும் இல்லாமல் நான் சாக மாட்டேன் என கூறிவிட்டு செல்கிறார் அப்பொழுது கோபி நேரடியாக பாக்யா வீட்டிற்கு வருகிறான் அங்கு அனைவரும் சாப்பிட உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது ஈஸ்வரி சாப்பாடு வாயில் எடுத்து வைக்கும் பொழுது கோபி அம்மா என கூப்பிடுகிறார் உடனே ஈஸ்வரி சாப்பாட்டை அப்படியே போட்டுவிட்டு முறைத்துக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் எனக்கு இனிமே நீ மகனே கிடையாது அம்மா மகன் உறவு எப்பையோ அருந்துடுச்சு எனக்கு ஒரே ஒரு மகள் தான் அது பாக்கியா மட்டும் தான் எனக்கூறி தலையில் தண்ணீரை ஊற்றிக் கொள்கிறார். அந்த சமயத்தில் அதை பார்த்த ரசிகர்கள் ஈஸ்வரி பாட்டி நீங்க தலையில தண்ணி ஊத்திக்கறது எல்லாம் கரெக்ட் தான், ஆனா பாக்கியா  இதை எப்படி நான் கிளீன் பண்ண போறேன்னு யோசிக்கிற மாதிரி தெரியுது என கமெண்ட் செய்து  வருகிறார்கள்.

Exit mobile version