விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா கோபி வீட்டில் நடந்த அனைத்தையும் தன்னுடைய அம்மாவிடம் கூறிக் கொண்டிருக்கிறார். அதற்கு ராதிகாவின் அம்மா பாக்யா எப்படி அந்த வீட்டில் நடித்துக் கொண்டு இருக்கிறார் அதே போல் நீயும் இருந்தால் தான் உன் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் எனக் கூறி விடுகிறார்.
அதுமட்டுமில்லாமல் ராதிகா தன்னுடைய அம்மாவிடம் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் நான் இங்கேயே தங்கி இருக்கிறேன். அப்படி வேண்டாம் என்றல் எங்கேயாவது போறேன் என கூறுகிறார். அதனால் ராதிகா அங்கேயே தங்குகிறார். அடுத்த காட்சியில் கிச்சனில் அமிர்தா, ஏழில், பாக்கியா என அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது செல்வி வருகிறார். இப்பதான் புயல் அடித்து ஓய்ஞ்ச மாதிரி இருக்கிறது வீடு என கூறுகிறார்கள்.
அப்படியே ராதிகா கூட அந்த ஆளும் போய்ட்டா நிம்மதியா இருக்கும் எனக் கூற அதற்கு செல்வி அவரெல்லாம் உங்க பாட்டி போக விட மாட்டாங்க மறுபடியும் பாக்யாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க எனக் கூற அதற்கு பாக்யா அதிர்ச்சி அடைகிறார் அது மட்டும் இல்லாமல் பாக்கியா நானே ராதிகா போய்ட்டாங்கன்னு கவலைல இருக்கேன் என கூற அதற்கு அனைவரும் அதிர்ச்சடைகிறார்கள்.
அப்படி இல்லை இனி அவருக்கும் சேர்த்து சமைக்கணும் காபி போட்டு கொடுக்கணும்னு என்கிட்ட வந்து நிப்பாங்க அதெல்லாம் நம்மளால முடியாது அதுக்காக தான் கூறினேன் என பாக்கியா கூறுகிறார். ஆனாலும் செல்வி நீ வேணா பாரு உங்க பாட்டி மறுபடியும் பாக்கியாவையும் கோபியையும் கல்யாணம் பண்ணிக்க சொல்லி சேர்ந்து வாழ சொல்லுவாங்க பாருங்க என ஆணித்தனமாக கூறுகிறார்.
அடுத்த காட்சியில் கோபி குடித்துக்கொண்டே தன்னுடைய நண்பரிடம் புலம்புகிறார் ராதிகா அவ கொஞ்சம் கூட புரிஞ்சுக்கல அவளுடைய பிஹேவியர் ரொம்ப மோசமா இருக்கு. எல்லாத்துக்கும் காரணம் ராதிகா தான் நாம பாட்டு அந்த வீட்ல இருந்தப்ப ஒரு பிரச்சனையும் இல்லை நான் இங்கதான் இருப்பேன்னு வந்தா எல்லா பிரச்சனையும் உருவாக்குறா.
என் பொண்ணு இனியா என் அப்பா அம்மா யார்கிட்டயும் பேசக்கூடாதுன்னு ராதிகா நினைக்கிறா என கூறிக் கொண்டிருக்கிறார் கோபி. அது மட்டும் இல்லாமல் பாக்கியா ஆபீஸ்லயும் அவளுக்கு தொல்லை கொடுக்கிறா அதை வந்து பாக்கியா வீட்ல சொல்லிவிட்டா அதுக்கும் என்னதான் திட்டுறாங்க நான் என்ன இளிச்சாவாயா எல்லார்கிட்டயும் திட்டு வாங்குறதுக்கு இது தான் எனக்கு வேலையா என தண்ணீ போட்டுக்கொண்டு புலம்பி கொண்டிருக்கிறார்.
அடுத்த காட்சியில் பாட்டிக்கு கால் வலி என்பதால் எழில் அவருக்கு தைலம் தேய்த்துக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் கோபி எழிலுக்கு கால் செய்கிறார் முதலில் செழியனுக்கு போன் செய்யலாம் என போனை எடுத்த கோபி செழியன் அடிப்பான் என தனக்குள்ளயே சொல்லிக் கொண்டு எழிலுக்கு கால் பண்ணுகிறார். இதில் முதலில் போனை எடுக்க மறுக்கிறார் பின்பு தாத்தா கூறியதால் போனை எடுத்துப் பேசுகிறார்.
அப்பொழுது கோபி நான் ஃபுல்லாக குடித்து விட்டேன் என்னை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போ எனக் கூறுகிறார் ஆனால் நீங்க எப்படியாவது போங்க எனக்கு என்ன எனக் கூறி விட்டு போனை கட் செய்கிறார் இதனை ஈஸ்வர்யிடம் எழில் கூற அதற்கு ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார் ஈஸ்வரி நாசுக்காக எழிலை கூட்டிக் கொண்டு வரக் கூற எழில் முடியாது என கிளம்பி விடுகிறார். பிறகு அமிர்தாவும் பாட்டிக்காவவுது கூட்டிக்கொண்டு வரலாமே என கேட்க எழில் முடியாது என தன்னுடைய அம்மா பட்ட கஷ்டங்களை அமிர்தாவிடம் கூறிக் கொண்டிருக்கிறார்.
இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.