விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் கதை நகர்ந்து வருகிறது இந்த நிலையில் கடைசி எபிசோடில் பழனிச்சாமி பாக்யா வீட்டிற்கு வந்துள்ளார் அது மட்டும் இல்லாமல் தன்னுடைய அம்மாவின் பிறந்தநாளுக்கு அனைவரையும் அழைத்து கொண்டிருக்கிறார்.
அந்த சமயத்தில் எதர்ச்சியாக கோபி வர அவரை சேல்ஸ்மேன் என தவறாக புரிந்து கொண்டு மிகவும் அசிங்கப்படுத்தி விடுகிறார் அதன் பிறகு அவர்தான் பாக்யாவின் கணவர் என தெரிந்து கொண்டு மன்னிப்பும் கேட்கிறார். ஏற்கனவே கோபி பழனிச்சாமியும் பாக்கியாவும் தவறாக பழகுகிறார்கள் என அனைவரிடமும் கூறி கோபி செழியன் மற்றும் எழிலிடம் அடி வாங்க பார்த்தார்.
அது மட்டும் இல்லாமல் பழனிச்சாமி அவர்களிடம் ஈஸ்வரி பாட்டி மற்றும் ராமமூர்த்தி தாத்தா இருவரும் பாக்யாவை பற்றி அனைத்தையும் கூறுகிறார்கள் படிக்க வசதி இல்லாததால் கோபிக்கு திருமணம் செய்து வைத்து விட்டோம் சிறுவயதிலேயே, ஆனால் ஆரம்பத்திலேயே கோபிக்கு பிடிக்கவில்லை போகப் போக பிடித்து விடும் என எதிர்பார்த்தோம் ஆனால் கடைசிவரை கோபிக்கு பிடிக்கவே இல்லை என அனைத்தையும் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அதில் கிச்சனில் பழனிச்சாமி வந்து அமர்ந்து கொண்டு இப்பதான் உங்க மாமியாரும் மாமனாராம் உங்கள பத்தி பெருமையா சொல்லிட்டு இருந்தாங்க நானே பிரம்மச்சிட்டேன் என சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது பாக்கியா ஏதோ ஒரு ஸ்வீட் செய்து கொண்டு பழனிச்சாமியிடம் கொடுக்கிறார்.
அதை சாப்பிட்டுவிட்டு பழனிச்சாமி பிரமாதமாக இருப்பதாக கூற அந்த சமயத்தில் கோபி வருகிறார் இவர்கள் இருவரும் தனியாக பேசிக் கொண்டிருப்பதையும் சிரித்துக் கொண்டிருப்பதையும் பார்த்து மீண்டும் தவறாக புரிந்து கொண்டார் இப்ப கிச்சன் வரையும் வந்துட்டானா அப்படி என்னதான் பேசுறாங்களோ தெரியலையே என கோபி புலம்பி கொண்டிருக்கிறார் உங்க கை பக்குவமே கை பக்குவம் தான் என பழனிச்சாமி கூற கோபி அதிர்ச்சிஅடைகிறார் இத்துடன் ப்ரோமோ வீடியோ முடிகிறது.