ஃபுல் மப்பில் மயங்கி கிடந்த கோபி.! தேடிச்சென்ற ஈஸ்வரிக்கு காத்திருந்த அதிர்ச்சி.! பாக்கியலட்சுமி ப்ரமோ வீடியோ.

gobi latest
gobi latest

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா நடந்த அனைத்தையும் தன்னுடைய அம்மாவிடம் கூறிக் கொண்டிருக்கிறார் அதேபோல் ஈஸ்வரி கால் வலிக்கிறது என்பதால் எழில் காலுக்கு எண்ணெய் தேய்த்து விடுகிறார். அதேபோல் மறுபக்கம் கோபி குடித்துவிட்டு தன்னுடைய நண்பரிடம் புலம்பி கொண்டிருக்கிறார்.

ராதிகாவை ஒரு நேரத்தில் நல்லவளாகவும் மற்ற நேரத்தில் கெட்டவளாகவும் தன்னுடைய நண்பரிடம் கூறிக் கொண்டிருக்கிறார் கோபி. குடித்து முடித்துவிட்டு வெளியே வந்த கோபி முதலில் செழியனுக்கு கால் செய்யலாம் என பேசுகிறார் ஆனால் செழியன் அடிப்பான் என தனக்குள்ளேயே நினைத்துக் கொண்டு என்னதான் எழில் கோபப்பட்டாலும் தன் மீது பாசமாக இருப்பான் என எழிலுக்கு கால் செய்கிறார்.

முதலில் போனை எடுக்க மறுக்கிறார் பின்பு தாத்தா எடுத்துப் பேசு என கூறியவுடன் போனை எடுத்து பேசுகிறார். அப்பொழுது கோபி நான் ஃபுல்லாக குடித்து விட்டேன் என்னால் கார் ஓட்ட முடியாது என்னை வந்து கூட்டிக்கொண்டு போ என கூறுகிறார். நீங்க எங்க இருந்தா எனக்கு என்ன எப்படியாவது கடங்க என கூறிவிட்டு எழில் போனை கட் செய்கிறார்.

எவ்வளவோ கூறியும்  எழில் போக மறுக்கிறார். ஆனாலும் ஈஸ்வரி கோபி குடித்துவிட்டு கடப்பதால் அழைத்துக் கொண்டு வா என எழிலிடம் கூற அதெல்லாம் என்னால முடியாது பாட்டி எனக் கூறிவிட்டு எழில் கிளம்பி விடுகிறார். இந்த நிலையில் தற்பொழுது ஒரு பிரமோ வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த ப்ரோமோ வீடியோவில் செழியன் மற்றும் ஈஸ்வரி பாட்டி இருவரும் கோபியை தேடிக் கொண்டு வருகிறார்கள் அந்த சமயத்தில் கோபியின் கார் நிற்பதை பார்த்துவிட்டு அருகில் வருகிறார்கள் அப்பொழுது கோபி நிதானம் இல்லாமல் குடித்துவிட்டு கீழே கிடக்கிறார் அவரை தூக்கி கொண்டு காரில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு போகிறார்கள் அந்த சமயத்தில் ராதிகா கோபிக்கு கால் செய்கிறார்.

அப்பொழுது அம்மாவை வணங்காத உயிர் இல்லையே என்ற பாடல் ஒலிக்கிறது அதற்கு சைகை செய்தபடி கோபி இருக்கிறார் ஆனால் ஈஸ்வரி கண் கலங்கியபடி அருகில் அமர்ந்துள்ளார் இந்த ப்ரோமோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.