பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் பாக்கியா பழனிச்சாமி இடம் போன் செய்து கதையெல்லாம் சொல்லி நாம திருமணம் செய்து கொள்ளலாம் என கூறுகிறார் இதனை வெளியே இருந்து கேட்டுக் கொண்டிருந்த கோபி அதிர்ச்சி அடைகிறார். என்னது இந்த வயதில் திருமணமான என அதிர்ச்சி அடைந்து கேட்டுக் கொண்டிருக்கிறார் அதுமட்டுமில்லாமல் பாக்யா மலை மீது நீங்கள் தனியாக ஏறுகிறீர்கள் அங்கு சூரியனையும் பார்த்து விடுகிறார்கள் அப்பொழுது உங்களுக்கு ஓவராக சந்தோஷம் இருக்கிறது அந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள ஒரு ஆள் வேண்டும் என்று தோன்றுகிறது என்ன பண்ணமுடியும்.
கல்யாணம் பண்ணிக்கணும் என்று கூறுகிறேன் எனும் பாக்யா சொல்கிறார் இதை அனைத்தும் கேட்டுக் கொண்டிருந்த கோபி லாம்ப் போஸ்ட் உடன் கல்யாணமா என அதிர்ச்சி அடைகிறார். அடுத்த காட்சியில் செழியன் தன்னுடைய கிளைண்டுகாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார் அப்பொழுது வெகு தாமதமாக அவர் வருகிறார். அவர் செழியினை மடக்க ஏதேதோ பேசுகிறார் ஆனால் செழியன் ஜெனி மெசேஜ் பண்ணுகிறார் என காட்டுகிறார்.
செழியன் என்ன என்னவோ செய்து அவரை டைவர்ட் செய்கிறார் ஆனாலும் அந்தப் பெண் கிளையன்ட் என்னென்னமோ செய்து செழியனை கவர் செய்ய பார்க்கிறார். ஆனாலும் செழியன் ஏதாவது காரணம் சொல்லி தப்பித்துக் கொண்டிருக்கிறார். அடுத்த காட்சியில் வாக்கிங் போய்விட்டு வீட்டிற்கு வருகிறார் கோபி பொண்ணு பார்க்க வாருகிறார்கள் என ஆரவாரத்தனம் விட்டை கிளீன் பண்ணி கொண்டு இருக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் இனியாவும் பலூன் வாங்கிக்கொண்டு பலூன் கட்டி விடலாமா என கேட்க இதென்ன பர்த்டே பங்க்ஷனா பொண்ணு தான பார்க்க வராங்க அதெல்லாம் தேவையில்லை என கூறிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது இவ்வளவு வயதாகி ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என இனியா கேட்க அதற்கு எழில் அவங்களுடைய இலட்சியத்தை அடைந்த பிறகு தான் கல்யாணம் செய்து கொள்வேன் என இத்தனை நாள் இருந்துள்ளார் அதுமட்டுமில்லாமல் அவருடைய பேஷனை தடுக்காதவராக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
அதற்கு பழனிச்சாமி சார் ஏற்றவராக இருப்பார் என பேசிக்கொள்கிறார்கள். உடனே அனைவரும் போன பிறகு கோபி இனியாவிடம் வந்து வீட்டில் உள்ளவர்கள் பரபரப்பாக இருக்கிறார்கள் என்ன நடக்கிறது என கேட்க பொண்ணு பார்க்க வருகிறார்கள் நம்ம வீட்டுக்கு என இனியா கூறிவிட்டு செல்கிறார். அதுமட்டுமில்லாமல் மீண்டும் ஸ்வீட்டை எடுத்துக் கொண்டு வரும்பொழுது கோபி பார்த்து விடுகிறார் அப்பொழுது இனியவிடம் நான் ஒன்னிடம் ஒன்று கேட்க வேண்டும் என கூற அப்பாடா நல்ல வேலை ஒன்று தானா இந்தாங்க வச்சுக்கோங்க எங்க எல்லாத்தையும் கேட்டு விடுவீங்களோனு பயந்தன் என ஒரே ஒரு லட்டை கொடுக்கிறார்.
இது இல்ல நான் கேட்க வரது என கூற ஏன் பொண்ணு பாக்க வராங்க என கேட்க ஆமப்பா மொதல்ல பொண்ணு பாப்பாங்க அப்புறம் தானே கல்யாணம் பண்ணிக்க முடியும் என இனியா கூறுகிறார். பிறகு கோபி கேட்க வருவதற்கு முன்பு லட்டை வாயில் அழித்திவிட்டு நான் புது டிரஸ் எடுத்துட்டு வரேன் எது வேணும்னு நீங்களே சொல்லுங்க நான் போட்டுகிறேன் எனக்கு கூறுகிறார்.
உடனே கோபி அம்மாவுக்கு கல்யாணம் இவ புது டிரஸ் போட போற என்ன நடக்குதுன்னு தெரியலையே என குழப்பத்தில் இருக்கிறார். புது டிரஸ் எடுத்து வந்து காட்டி விட்டு இனியா செல்கிறார். ரூமிற்கு சென்ற கோபி நான் கல்யாணம் செய்து கொள்ளும் பொழுது செழியனுக்கு மட்டும்தான் கல்யாணம் ஆகி இருந்தது ஆனா இப்ப எழிலுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. அவன் கூட ஒரு பாப்பாவும் இருக்கு ஆயிரம் தான் இருந்தாலும் அது பேத்தி தான் இன்னும் ரெண்டு மூணு வருஷத்துல இனியாவுக்கும் கல்யாணம் ஆகிடும் இந்த வயதில் கல்யாணமா என பாக்கியாவை திட்டிக் கொண்டிருக்கிறார்.
இவர் புலம்பி கொண்டிருக்கும் பொழுது ராதிகா வந்து விடுகிறார் என்ன கோபி என்ன புலம்பி கொண்டிருக்கிறீர்கள் என கேட்க வாய்க்கொளரி உண்மையை சொல்ல பார்க்கிறார் உண்மையை சொன்னால் அதற்கும் என்னை தான் திட்டுவாள் ராதிகா என ஆபீசில் யாரும் வேலை செய்ய மாட்டேன்ங்கிறார்கள் ஏதேதோ சொல்லி மழுப்புகிறார். பிறகு ராதிகா வாங்க என்னோட பிரண்டோட நிச்சயதார்த்தத்திற்கு செல்லலாம் என அழைக்கிறார் ஆனால் கோபி நான் அங்கு சென்றாள் இங்கு பாக்யாவுக்கு திருமணம் நடந்து விடும் என மனதில் நினைத்துக் கொண்டு வரவில்லை ரெஸ்ட் எடுக்கிறேன் என கூறி விடுகிறார்.
அந்த சமயத்தில் மயு வாங்க டாடி நான் அம்மா நீங்க மூணு பேரும் ஒண்ணா போய் ரொம்ப நாளாச்சு இப்ப சேர்ந்து போகலாம் என கூப்பிடுகிறார் இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.