பாக்யாவுடன் இணைந்து ராதிகாவை பழிவாங்க போகும் கோபி… தன் மகள் வாழ்க்கையை குழி தோண்டி புதைக்கும் கமலா…

பாக்கியலட்சுமி சீரியலில் நாளுக்கு நாள் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது அந்த வகையில் ராதிகா தன்னுடைய குழந்தையை இழந்து நிற்கிறார் இந்த சமயத்தில் ராதிகாவின் அம்மா மகளின் வாழ்க்கையை நினைத்து கஷ்டப்படுகிறார். இதற்கு நானே ஒரு முடிவு கட்டுகிறேன் என ஒரு மாஸ்டர் பிளான் போடுகிறார் அந்த மாஸ்டர் பிளானில் ஈஸ்வரியை சிக்க வைக்க முயற்சி செய்கிறார்.

அதற்காக ஈஸ்வரி மீது போலீஸ் ஸ்டேஷன் சென்று கம்பளைண்ட் செய்கிறார் அதற்கு காரணம் கோபி தான், ஏனென்றால் கோபி வீட்டிற்கு வந்து ஒரு பைலை கேட்க அதற்கு ராதிகாவின் அம்மா குடிகார புருஷன், கொலைகாரி அம்மா இவங்க கூட எப்படி என் பொண்ணு குடும்பம் நடத்த முடியும் என ஒரு வார்த்தையை விடுகிறார். அதனால் கோபிக்கு கோவம் வருகிறது உடனே ராதிகாவின் அம்மாவை அடிப்பதற்கு கை ஓங்குகிறார்.

இதனால் கோபப்பட்ட ராதிகாவின் அம்மா கமலா உடனடியாக போலீஸ் ஸ்டேஷன் சென்று ஈஸ்வரியால் என்னுடைய மகளின் கற்பம் கலைந்து விட்டது அவரையும் கொல்ல முயற்சி செய்கிறார் என ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்துவிட்டு வருகிறார். இதனால் போலீஸ் அதிரடியாக இறங்கி பாக்யா வீட்டிற்கு சென்று யார் இங்கு ஈஸ்வரி நீதான் ராதிகா வயிற்றில் வளர்ந்த கருவை கலைத்ததா அவரை கொலை செய்ய முயற்சி செய்கிறாயா என கைது செய்கிறார்கள் உடனே ஈஸ்வரி தலையில் அடித்துக் கொண்டு அழுகிறார்.

ஈஸ்வரியை போலீஸ் கைது செய்து அழைத்துச் செல்லும் பொழுது கோபி பார்க்கிறார் என்ன இங்கு போலீஸ் வந்துவிட்டு செல்கிறது என கேட்க ராமமூர்த்திக்கு கோவம் வந்து கோபியை செவிலில் அரைகிறார். இதனால் கோபி மனமடைந்து நிற்கிறார் இனிமேல் பாக்யாவுடன் சேர்ந்து கொண்டு கோபி ராதிகாவை பழி வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது கமலாவின் அவசர புத்தியால் ராதிகாவின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ராதிகா தலையில் கை வைத்து இனிமேல் என்ன செய்யப் போகிறோம் என வருத்தப்பட போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது..  அல்லது கோபி வழக்கம்போல் ராதிகாவுக்கு தான் சப்போர்ட் செய்யப் போகிறாரா இல்லை பாக்கியா பக்கம் நின்று ஈஸ்வரியை வெளியே எடுக்க முயற்சி செய்யப் போகிறாரா என பொறுத்திருந்து பார்க்கலாம் ஆனால் கமலா மீது இனி கோபிக்கு கோபம் வந்துவிட்டது ஒரு வழியாக ஒரு கை பார்க்கலாம் என முயற்சி செய்யப் போகிறார் இதனால் ராதிகா பாதிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version