விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா ஈஸ்வரியிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டார் அதனால் கழுத்தை பிடித்து ராதிகாவை வெளியே தள்ளி கேட்டை மூடுகிறார். தெருவில் இருக்கும் அனைவரும் ராதிகாவின் நிலைமையை வேடிக்கை பார்க்கிறார்கள் அப்பொழுது ராதிகாவின் அம்மா ராதிகாவை பார்த்து ஏன் இங்க நிக்கிற என கேள்வி எழுப்புகிறார்.
எல்லாம் உன்னால தான் நான் அப்பவே அங்கேயே இருந்து இருப்பன் நீதான் கோபி இருக்கிற இடத்தில இருக்கணும்னு சொல்லி என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுட்ட என ராதிகா தன்னுடைய அம்மாவை பார்த்து கேட்கிறார். இதற்கு என்ன செய்ய வேண்டும் என தெரியும் என கூறிவிட்டு கிளம்புகிறார் ராதிகா அம்மா. ராதிகா கோபியிடம் நீங்க இப்ப ஆபீஸ் போக வேணாம் சீக்கிரம் வீட்டுக்கு வாங்க என அழுது கொண்டே கூற கோபி வருகிறார்..
கோபியை கட்டிப்பிடித்துக் கொண்டு கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விட்டாங்க உங்க அம்மா எனக் கூற அம்மா இப்படி செய்கிற ஆளே கிடையாது என கோபி பேச அதற்கு ராதிகா கடுப்பாகி அப்ப நான் பொய் சொல்றேன்னு சொல்றீங்களா என அழுது கொண்டே கேட்கிறார். பிறகு உள்ள வா நான் பேசுறேன் என ராதிகாவை அழைத்துக் கொண்டு உள்ளே செல்கிறார்.
உள்ளே செல்வி இன்னைக்கு ஏதோ ஒரு பூகம்பம் நடக்கப்போகிறது என அனைவரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறார். கோபி ராதிகாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு உள்ளே வரும் பொழுது நில்லுடா என ஈஸ்வரி அதட்டுகிறார். அதனால் அப்படியே நிற்கிறார் கோபி ஈஸ்வரி இவ இங்கு வரவே கூடாது இவ வீட்டுக்குள்ள வந்தா நான் வெளியே போயிடுறேன் இவன் முக்கியமா நான் முக்கியமா என்ன முடிவு பண்ணிக்கோ எனக் கூறுகிறார்.
அதுமட்டுமில்லாமல் உங்க அப்பாவை அவர் இவர் என்ன மரியாதை இல்லாமல் பேசினா இவ, என்னிடம் கைநீட்டி மரியாதை இல்லாம பேசுற என்னையே வீட்டை விட்டு வெளில போக சொல்றா என ராதிகா நடந்து கொண்ட அனைத்தையும் கோபியிடம் கூறிவிடுகிறார். இதனால் கோபி டென்ஷன் ஆகிறார் ஈஸ்வரி ஒவ்வொன்றாக சொல்ல ராதிகாவின் முகம் கோபத்தில் கொந்தளிக்கிறது.
அவ வீட்டுக்குள்ள வந்தா நாங்க எல்லாரும் வீட்டை விட்டு கிளம்பிடுவோம் என கோபியை ஈஸ்வரி மிரட்டுகிறார். அவ முக்கியமா நான் முக்கியமா என நீயே முடிவு பண்ணிக்கோ என ஈஸ்வரி கோபிக்கு செக் வைக்கிறார். உடனே கோபி நாம இங்க வந்ததால் தான் எல்லா பிரச்சனையும் நாம நம்ம வீட்டுக்கே போயிடலாம் என ராதிகாவை அழைக்கிறார் உடனே ஈஸ்வரி நக்கலாக சிரித்துக் கொண்டு ராதிகாவை பார்த்து இதுதான் நீ கல்யாணம் பண்ணுன லட்சணம் என கூறுகிறார்.
ராதிகாவின் அம்மா போலீசாருடன் வந்து இறங்குகிறார் இதை பார்த்து ஈஸ்வரி நடுநடுங்குகிறார். போலீஸ் விசாரணையை தொடங்குகிறார்கள் அப்பொழுது போலீசார் இது யார் என விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்தான் என்னுடைய மகள் ராதிகா கோபியை திருமணம் செய்து கொண்டவர் என ராதிகாவின் அம்மா கூறுகிறார். உடனே அந்த நேரத்தில் செழியன் வருகிறார் என்ன ஆச்சு ஏதாவது பிரச்சனையா என கேட்க செழியன் இடம் நம்ம எல்லாத்தையும் உள்ள தூக்கி வைக்கணும் என கூறுகிறார் என கூறுகிறார் எழில் உடனே கோபி இவர்தான் என்னுடைய பையன் என போலீசாரிடம் கூறுகிறார்.
இப்படி வாக்குவாதம் செய்து கொண்டிருந்த ராதிகாவின் அம்மா மற்றும் ஈஸ்வரி இருவரும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் இதனால் கடுப்பான போலீசார் கத்துகிறார் நீங்களே பேசி ஒரு முடிவுக்கு வந்துக்கோங்க நான் வேணா கிளம்பட்டுமா என கேட்கிறார். அதற்கு ராதிகாவின் அம்மா சாரி மேடம் நீங்களே விசாரிச்சு ஒரு முடிவு சொல்லுங்க என நின்று கொண்டிருக்க உடனே ஈஸ்வரி இவை என் மருமகளே கிடையாது பாக்கியா தான் என் மருமக என போலீசாரிடமும் கூறுகிறார்.
இதனால் ராதிகா அதிர்ச்சடைகிறார் உடனே போலீசார் அவங்க அந்த பொண்ண மருமகன்னு சொல்றாங்க நீங்க உங்க மகளை மருமகள்னு சொல்றீங்க யாருதான் இப்ப மருமகள் என கேள்வி எழுப்புகிறார் உடனே கோபியிடம் நீங்க சொல்லுங்க சார் யார் உங்களுடைய பொண்டாட்டி யார் என கேட்க அதற்கு பாக்யாவின் முகத்தையும் பார்க்கிறார் கோபி அதன் பிறகு ராதிகாவின் முகத்தையும் பார்க்கிறார் இதனால் ராதிகா மிகுந்த கோபத்தில் இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.