பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமடைந்துள்ளது அது மட்டும் இல்லாமல் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இந்த சீரியலில் கோபி முதலில் பாக்கியவை திருமணம் செய்து கொள்வார் ஆனால் அவரை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் ராதிகாவை திருமணம் செய்து கொள்கிறார் அதன் பிறகு அவர் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது,
பாக்கியா கோபியை பிரிந்த பிறகு தன்னுடைய தொழிலில் முன்னேறி வருகிறார் அதேபோல் கோபி ராதிகாவை திருமணம் செய்து கொண்ட பிறகுபெரும் கஷ்டத்தை அடைந்து வருகிறார் இந்த நிலையில் ராதிகா கோபி இருவரும் தற்பொழுது பாக்கியா வீட்டில் வந்து விட்டார்கள் அதனால் வீட்டில் ரகளை தினம் நடந்து கொண்டு வருகிறது.
இந்த நிலையில் தற்பொழுது ராதிகாவின் மகள் மையூ தற்போது வீட்டிற்கு வந்து விட்டார் இது இன்னும் சீரியலின் சுவாரசியத்தை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சமீபத்திய எபிசோடில் ராதிகாவின் மகள் மயூவிர்க்கு கோபி சொல்லி கொடுத்து கொண்டு இருக்கிறார் இதைப் பார்த்து காண்டான இனியா பாட்டியிடம் கூற பாட்டி மேலே வந்து அவளுக்கு சொல்லிக் கொடுத்தது போதும் இவளுக்கு சொல்லிக் கொடு பிளஸ் டூ படிக்கிறால் என கூறி விடுகிறார்.
இதனால் இனியா ரொம்ப நேரம் படித்துக் கொண்டிருக்கிறார் தூங்குவதற்காக ராதிகா வந்தும் பிளஸ் டூ இனிய படிக்கிறால் கொஞ்ச நேரம் படிக்கட்டும் என கோபி கூறிவிடுகிறார் அதனால் ராதிகாவுக்கு இன்னும் கோபம் அதிகமாகிறது. அப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது இந்த ப்ரோமோ வீடியோவில் ஈஸ்வரி ராதிகாவின் கழுத்தைப் பிடித்து இழுத்துக்கொண்டு தரதர என வெளியே இழுத்துச் செல்கிறார்.
அந்த நேரம் பார்த்து கோபி வர நடந்த அனைத்தையும் கோபியிடம் ராதிகா வத்த வைக்கிறார் கோபி ராதிகாவை வீட்டிற்கு அழைத்து செல்கிறார் அந்த சமயம் ராதிகாவின் அம்மா போலீசார் உடன் வந்து ஈஸ்வரியை அரெஸ்ட் செய்ய சொல்கிறார்கள். உடனே போலீஸ் உங்க மகன் இவரை கல்யாணம் பண்ணிக் கொண்டார் அதனால் இவரை வெளியே போக சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது எனக் கூறி விடுகிறார்கள்.
ராதிகா மிகவும் கெத்தாக வீட்டிற்கு உள்ளே செல்கிறார் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.