விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் கோபி வழக்கம் போல் இனியவை ஸ்கூலில் விடுவதற்கு ரெடியாகிறார். ஆனால் ராதிகா இன்று மயூவை விட்டு விடுங்கள் எனக்கு மீட்டிங் இருப்பதாக கூறி விடுகிறார். அதனால் வீட்டில் பெரிய பிரச்சினை ஏற்படுகிறது உடனே ரூமிற்கு வந்த ராதிகாவிடம் கோபி நீ வேணும்னே தான் செய்ற நான் இனியாவோட பாசமாய் இருக்கிறது உனக்கு பிடிக்கல என கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.
ஆனால் ராதிகா நீங்க இனிய மேல பாசமா இருக்கிறதால எனக்கு என்ன அதுல கொஞ்சமாச்சும் மயூ மேல பாசமாக இருங்க எனக் கூறுகிறார் ஆனால் கோபி மயூ மீது நான் அதிக நேசமாக இருக்கிறேன் என கூறுகிறார். இப்படியே பேசிக் கொண்டிருக்கும் பொழுது மயூ உள்ளே வருகிறார் இப்படியே பேசிக் கொண்டிருக்கும் போது மயூ உள்ளே வருகிறார் ஸ்கூலுக்கு போகலாம் எனக் கூறுகிறார் அப்பொழுது ராதிகா நானே கொண்டு விடுகிறேன் என கூற அதற்கு கோபி நானே கொண்டு விட்டு வருகிறேன் என வாக்குவாதம் செய்கிறார்.
பிறகு கோபி கிளம்புகிறார் அங்கு ஈஸ்வரி இதெல்லாம் என்ன வேலை இனியா ஸ்கூல்ல டிராப் பண்ண சொன்னா அவ பொண்ண கூட்டிட்டு போறியா என கேள்வி கேட்கிறார். இதனால் ஈஸ்வரி மிகுந்த கோபத்தில் இருக்கிறார் அந்த சமயம் ராதிகா காபி போடுவதற்காக கீழே வருகிறார் அப்பொழுது பாக்யாவை சைகையாலையை மிரட்டி தூரமாக போக வைக்கிறார்.
பிறகு காபி போட்டு கையில் எடுத்துக் கொண்டு கிளம்பும் நேரத்தில் ஈஸ்வரி உனக்கு என்ன அவ்வளவு திமிரா என காபி டம்ளரை தட்டி விடுகிறார் இதனால் கடுப்பான ராதிகா, இப்ப எதுக்கு என்னுடைய காபிய தட்டி விட்டீங்க என சண்டை போடுகிறார். பாக்கியா அமைதியாக இருங்க சண்டை வேணாம் எனக் கூற அதற்கு ராதிகா இதெல்லாம் உன்னோட வேலை தானா நீ தான் ஏத்தி விடுறியா என கேட்கிறார்.
ஆனால் ஈஸ்வரி அவ என்ன என்கிட்ட சொல்றது எனக்கு சுய புத்தி இல்லங்கிறியா என பதில் பேசுகிறார் அந்த சமயத்தில் ஜெனி பாக்கியாவுக்கு சப்போர்ட் செய்ய உடனே உங்க ஆன்ட்டி இப்படி பேச சொன்னாங்களா என அவர் மீதும் பாய்கிறார் அந்த சமயத்தில் காபி கொட்டியதை செல்வியை துடைக்க சொல்கிறார் ராதிகா ஆனால் ஈஸ்வரி அதெல்லாம் முடியாது நீ தான் துடைக்கணும் என கோபத்துடன் கூறுகிறார். நான் எதுக்கு தொடைக்கணும்? நீங்க தானே தள்ளி விட்டீங்க எனக்கு துடைப்பதற்கு நேரம் இருந்ததுன்னா நான் மயூவ நானே ஸ்கூலில் ட்ராப் செய்து இருப்பேனே என ராதிகா வாக்குவாதம் செய்கிறார்.
அதுமட்டுமில்லாமல் ஈஸ்வரி கோபியையும் இனியாவையும் பிரிக்க பார்க்கிறாயா அது ஒரு காலத்திலேயே நடக்காது என கூற அதற்கு ராதிகா உங்க பொண்ணு அங்க வந்து இருந்தாலே நான் நல்லா தானே பாத்துக்கிட்டேன் உங்க புருஷன் அங்க வந்து இருந்தாரு அவரையும் நல்லா தானே பாத்துக்கிட்டேன். என மரியாதை குறைவாக பேசுகிறார். இதனால் கடுப்பான அமிர்தா வயசுல பெரியவரு கொஞ்சம் கூட மரியாதை கொடுக்க மாட்டீங்களா என கேட்க நான் மரியாதை கொடுப்பேன் ஆனா இவங்க ஏத்துக்க மாட்டாங்க அப்புறம் எப்படி நான் பேசுவேன் என மூஞ்சில அடித்தது போல் கூறி விடுகிறார் ராதிகா.
இப்படியே பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஈஸ்வரியை தள்ளிவிட்டு வெளியே செல்ல பார்க்கிறார். அதில் நிலை தடுமாறி ஈஸ்வரி கீழே விழப் பார்க்கிறார். அவரை தாங்கி பிடித்துக் கொள்கிறார் செல்வி மற்றும் பாக்யா இதனால் குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறது ஆனாலும் ஈஸ்வரி என்னையே தள்ளி விடுறியா எல்லாத்தையும் கோபிகிட்ட சொன்னனா உன்னையே கோபி கழுத்தை புடிச்சு வெளியே தள்ளி விடுவான் என்கிட்ட மரியாதை இல்லாம பேசினது தெரிஞ்சா அவ்வளவுதான் என ராதிகாவிடம் ஈஸ்வரி சபதம் போடுகிறார்.
பிறகு வாக்குவாதம் அதிகமானதால் ராதிகா வயசான காலத்துல ஓரமா கிடங்க அப்படி பிடிக்கலைன்னா வீட்டை விட்டு வெளியில போங்க என ஈஸ்வரியை பார்த்து ராதிகா கூறுகிறார் இதனால் கடுப்பான ராமமூர்த்தி இது ஒன்னும் கோபி சுயமா சம்பாதித்தது கிடையாது நான் நிலத்தை வித்து பாதி பணத்தை கொடுத்த பிறகு தான் கோபி லோன் போட்டு மீதி பணத்தை கொடுத்தான் எனக் கூறி விடுகிறார். அதுமட்டுமில்லாமல் உடனே ஈஸ்வரி நீ வீட்டை விட்டு வெளில போடி கோபி கிட்ட சொன்னா அவனே கழுத்தை புடிச்சு உன்ன வெளியில தள்ளிடுவான் எனக் கூறுகிறார்.
ஆனாலும் ஈஸ்வரி ராதிகாவை விடாமல் உனக்கு அவ்வளவு திமிர் ஆகிடுச்சா என்னையே வீட்டை விட்டு வெளியே போக சொல்ற என கோபப்பட்டு ராதிகாவை கழுத்தை பிடித்து வெளியே தள்ளி கேட்டை மூடுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது ராதிகா கண்ணீருடன் வெளியே அழுது கொண்டிருக்கிறார்.