கோபியை போல் குடித்துவிட்டு மாட்டிக்கொண்ட செழியன்.! இந்த கல்யாணம் ஆர்டர் வேண்டாம் பாக்கியா எனக் கூறும் தோழிகள்.! அதிர்ச்சியாகும் பாக்கியா

baakiyalakshmi-serial
baakiyalakshmi-serial

இன்றைய பாக்கியலட்சுமி எபிசோடில் ஜெனியிடம் செழியன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ப்ராஜெக்ட் மேனேஜர் மாலினி கால் செய்கிறார் அதனால் மீட் பண்ணுவதற்காக அவர் இருக்கும் இடத்திற்கு செல்கிறார். ஆனால் அங்கு மாலினி சாரி கேட்க பரவாயில்லை என கூறிவிட்ட சரி என பேசிக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் என்ன சாப்பிடுறீங்க என கேட்க ஜூஸ் சொல்லவா என கூறுகிறார் மாலினி.

என்னோட வீட்டில் பிரச்சனை எனக் கூறஉடனே மாலினி ஜெனிக்கும் உங்களுக்குமா என  கேட்க இல்லை வீட்டில் பிரச்சனை என கூறுகிறார். எனக்கு இருக்கிற டென்ஷனுக்கு இப்பொழுது ட்ரிங்க் சாப்பிட்டா கூட பரவாயில்லை எனக் கூற உடனே மாலினி செழியனுக்கு ட்ரிங்க்ஸ் ஆர்டர் பண்ணுகிறார் உடனே வெயிட்டர் எடுத்துக் கொண்டு வருகிறார் இதைப் பார்த்த செழியன் நான் சும்மா சொன்னான் மாலினி இல்ல பரவாயில்ல குடிங்க என கூறுகிறார்.

செழியனும் குடித்து விடுகிறார் என்ன பிரச்சனைன்னு சொல்லு செழியா என கேட்க அதெல்லாம் ஒன்றும் இல்லை எனக் கூறுகிறார். குடும்பம் என்று இருந்தாலே பிரச்சனை இருக்கத்தான் செய்யும் எனக்கும் பிரச்சனை இருக்கிறது என கூறும் பொழுது செழியன் மாலினியை பார்கிறார்  இருந்தாலும் எனக்கு பிரச்சனை இருக்கிறது என அழுக உடனே செழியன் ஆறுதல் கூறுகிறார். பிறகு ப்ராஜெக்ட் மேனேஜர் செழியன் கை மீது வைக்க உடனே சரி நான் கிளம்புகிறேன் என கூறிவிட்டு கிளம்புகிறார்.

வீட்டுக்கு வந்த செழியன் பாக்யாவிடம் சிக்கி கொள்கிறார் குடிச்சியா என கேட்க லைட்டாக குடிச்சேன் என கூறுகிறார் உங்க அப்பா இப்படி தான் பண்ணாரு அடுத்தது நீயும் ஆரம்பிச்சிட்டியா? நீயே எத்தனை டைம் பார்த்து இருக்க என்ன என்ன பிரச்சனை வந்திருக்குன்னு என பாக்கியா செழியனிடம்  கேட்கிறார் உடனே செழியன் சாரி சொல்லிவிட்டு இனி குடிக்க மாட்டேன் என கூறி விடுகிறார். திடீரென செழியன் எழில் மட்டும் இல்லம்மா நானும் உனக்கு சப்போர்ட்டா தான் இருப்பேன் எனக் கூறுகிறார்.

அடுத்த நாள் காலையில் பாக்யா பழனிச்சாமி சாரை பார்க்க செல்கிறார் அங்கு இந்த ஆர்டரை நானே செய்கிறேன் என பழனிச்சாமிடம் கூற முதலில் வேண்டாம்னு சொன்னீங்க இப்ப ஓகே சொல்றீங்க என கேட்க அதற்கு பாக்கியா பணப்பிரச்சனை அதனால் கண்டிப்பாக செய்கிறேன் எனக் கூறி விடுகிறார் பழனிச்சாமிடம் பேசிவிட்டு தன்னுடன் வேலை செய்யும் அனைத்து தோழிகளையும் வர சொல்லி பாக்கியா 5000 பேருக்கு சமைக்க வேண்டும் 3 நாளைக்கு என்பதை கூறுகிறார் உடனே அனைவரும் அதிர்ச்சி அடைந்து இவ்ளோ பெரிய ஆர்டர் நம்ம எப்படி பண்றது அதனால் வேண்டாம் என கூறி விடுங்கள் என சக தோழிகள் கூறுகிறார்கள். இதனால் பாக்கியா அதிர்ச்சி அடைகிறால்.