பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் ராதிகா கோபி வந்தவுடன் இந்த வீடு யாருடைய வீடு எனக்கு சொந்தம் இல்லையா கோபி என கேட்க இது உன்னுடைய வீடு தான் ராதிகா என கோபி கூறுகிறார் உடனே பாக்கியா நீங்க வீட்டை விக்கிறேன்னு சொல்றீங்க நான் வாங்குறேன்னு சொல்லி இருக்கேன் அதனால இன்னும் மீதி பணத்தை நான் தந்துட்டனா இங்க இருந்து நீங்க போயிடுவீங்களா என கேள்வி கேட்கிறார். அதற்கு கோபி நீங்க பஸ்ட் பணத்தை கொடுங்க அப்புறம் யோசிக்கலாம் என்பது போல் கூற அதெல்லாம் பேச்சே கிடையாது பணத்தை கொடுத்தால் இங்கே இருந்து கிளம்பி விடுவீங்களா உங்க குடும்பத்தை கூட்டிகிட்டு என பாக்கியா கேட்கிறார்.
அதற்கு கோபி பணத்தை கொடுத்துட்டா கிளம்புறேன் என வாக்கு கொடுத்துட்டு மேலே ராதிகாவை கூட்டிக்கொண்டு போகிறார். ஆனால் ஈஸ்வரி கண்ணீரில் பாக்கியாவை கட்டி பிடித்துக் கொண்டு அழுகிறார் அவ பேசின பேச்சுக்கு அவ கை கால் விளங்காமல் போயிடும் என ஈஸ்வரி ராதிகாவை பார்த்து திட்டுகிறார். அது மட்டும் இல்லாமல் ராமமூர்த்தி 18 லட்சம் எப்படி பணத்தை நம்ம ஒரே மாசத்துல புரட்ட முடியும் என்னோட பென்ஷன் பணத்தை நான் எடுத்து தரேன் அதையும் வச்சுக்கிட்டு எப்படியாவது ரெடி பண்ணலாம் என கூற பாக்கியா அதை நீங்க கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் அது உங்களுக்கு தேவையான பணம் அதை நீங்க எடுக்க வேண்டாம் என கூறிவிடுகிறார் பாக்யா.
இப்படியே பேசிக் கொண்டிருக்க இன்னும் ஒரு மாசம் இருக்கு கண்டிப்பா பணத்தை ரெடி பண்ணிடலாம் என பாக்கியா நம்பிக்கையுடன் கூறுகிறார். அடுத்த காட்சியில் ராதிகா பாக்யா சபதம் போட்டதை தன்னுடைய அம்மாவிடம் கூறிக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் இந்த வீட்டிலேயே இருக்க புடிக்கல என ராதிகா கூற நீ அங்க தான் இருக்கணும் அவங்க தான் இந்த வீட்டை விட்டு போகணும் ஒரே மாசத்துல 18 லட்சம் அவ்ளோ சீக்கிரம் யாரும் ரெடி பண்ண முடியாது என ராதிகாவின் அம்மா ராதிகாவிடம் கூறிக் கொண்டிருக்கிறார்.
அந்த சமயத்தில் கோபி வருகிறார் எதுவும் பேசாத என்னை அஞ்சு நிமிஷம் தனியா இருக்க விடு நான் ரெஸ்ட் எடுக்கணும் ஒரே தலைவலியா இருக்கு எப்ப பாரு சண்டை சண்டை எப்ப பாரு சபதம் போட்டு இருக்கிறது வேலையா போச்சு என கோபி பேசிக் கொண்டிருக்க. ராதிகா எழுந்து செல்கிறார். அடுத்த காட்சியில் ஜெனி செழியன் இடம் நடந்த அனைத்தையும் கூறிக் கொண்டிருக்க நான் அப்பவே தப்பு பண்ணிட்டேன் அப்பவே நான் பணத்தை கொடுத்து இருந்தா இந்த பிரச்சனையே வந்திருக்காது என்பது போல் ஃபீல்ஸ் பண்ணுகிறார். அந்த சமயத்தில் செழியன் ப்ராஜெக்ட் மேனேஜர் கால் செய்து உங்களை மீட் பண்ணனும் என கூறுகிறார் ஆனால் செழியன் காலை கட் செய்கிறார்.
அப்படி இருக்கும் நிலையில் ஜெனி நீ இந்த வேலையை புடிச்சு தான் பண்ற அதனால நீ போய் மீட் பண்ணிட்டு வா என்பது போல் கூற உடனே சரி ஏன் கிளம்பி விடுகிறார் ஒருவேளை அப்பாவை போல் செழியனும் மாறிவிடுவாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அடுத்த காட்சியில் இனியா சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் எழில் வருகிறார் உடனே ஏன் இனியா இவ்வளவு டல்லா உட்கார்ந்து இருக்க பரிச்சை நினைத்து யோசிச்சிட்டு இருக்கியா என்ன கேட்க அதெல்லாம் ஒரு மேட்டரே கிடையாது வீட்டில் நடந்ததை நினைச்சா தான் கஷ்டமா இருக்கு என்பது போல் கூற உடனே என்ன நடந்தது என எழில் கேட்க அனைத்தையும் இனியா கூறிவிடுகிறார் எழில் உடனே அந்த ஆளு எதுவுமே கேட்கலையா என கோபப்படுகிறார்.
நான் போய் என்னன்னு கேட்டுட்டு வரேன் என எழுந்திருக்கும் பொழுது பாக்கியா நீ எதுவும் கேட்க வேணாம் ஒரு மாசத்துல நான் பணத்தை கொடுக்கிறேன் என்று சொல்லிட்டேன் பணத்தை கொடுத்தாள் அவர்கலே கிளம்பிடுவாங்க அதுக்கப்புறம் அவங்க கிட்ட நமக்கு என்ன பேச்சு என்பது போல் பாக்கியா கூறுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.