பாக்கியலட்சுமி சீரியலில் முந்தைய எபிசோடில் ராதிகா கோபியிடம் நீங்க ஏன் பாக்யா பின்னாடி சுத்துறீங்க பாக்யாவை இன்னும் மறக்க முடியலையா, பாக்கியாவுக்கு கல்யாணம் ஆகுதுன்னா உங்களுக்கு என்ன எதுக்கு குட்டி போட்ட பூனை மாதிரி நீங்க பின்னாடியே சுத்துறீங்க அப்போ பாக்கியா தான் உங்க மனசுல இருக்காளா என ராதிகா கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். இதெல்லாம் யார் இப்படி சொன்னது என கோபி கேட்க பாக்கியா தான் இதை மாதிரி என்னிடம் கேட்கிறார் என கோபியிடம் ராதிகா கூறுகிறார்.
உடனே கோபி பாக்கியாவிடம் நீ செய்வதெல்லாம் சரியா எதற்காக ராதிகாவிடம் வம்பு பண்ணுற என கேட்க யார் வம்பு பண்றது நீங்க ரெண்டு பேரும் தான் என் வாழ்க்கையில தேவையில்லாம உள்ள வரீங்க உனக்கும் எனக்கும் தான் ஒன்னும் இல்லன்னா ஆயிடுச்சு இல்ல எதுக்கு தேவையில்லாம என் பின்னாடியே வரீங்க. நான் யார் கிட்ட பேசினா உங்களுக்கு என்ன பழனிச்சாமி சார் வீட்டுக்கு எதுக்கு போனீங்க நான் யார் கூட பேசினா உங்களுக்கு என்ன உங்களுக்கு எனக்கும்தான் டிவோர்ஸ் ஆயிடுச்சு இல்ல அது ஞாபகம் இருக்கா இல்லையா என்பது போல் பேசுகிறார்.
இதற்கெல்லாம் பதில் பேச முடியாமல் கோபி முழித்துக் கொண்டே மேலே சென்று விடுகிறார். இனியா எக்ஸாம் எழுதுவதால் பழனிச்சாமி கிப்ட் வாங்கிக் கொண்டு இனியவை பார்க்க வந்துள்ளார் அப்பொழுது கோபி ஆபீஸ்க்கு கிளம்பும் நேரத்தில் பழனிச்சாமி சார் இனியாவிற்கு விலை உயர்ந்த பேனாவை கிப்டாக கொடுப்பதை பார்த்து விடுகிறார் முதலில் பாக்கியவ கரெக்ட் செஞ்சான் இப்ப குழந்தைகிட்ட வரியா என கோபப்படுகிறார்.
இந்த நிலையில் தற்பொழுது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது இந்த ப்ரோமோ வீடியோவில் ராதிகா தன்னுடைய குடும்பத்தில் உள்ள அனைவரையும் அழைத்துக் கொண்டு வந்து வீட்டில் கும்மாளம் அடிக்கிறார் இதை பார்த்த ஈஸ்வரி முதலில் என் பையன ஏமாத்தி என்கிட்ட இருந்து பிரிச்ச இப்ப என்ன வீட்டையும் உன்னோடதுனு உரிமை கொண்டாட பாக்குறியா என ஈஸ்வரிஇடம் காட்டு கத்து கத்துகிறார்.
அதனால் ஈஸ்வரியை மரியாதை இல்லாமல் சொடக்கு போட்டு ஏய் என ராதிகா பேசுகிறார் உடனே கோபப்பட்ட பாக்கியலட்சுமி மரியாதையா பேசு பெரியவங்களுக்கு மரியாதை கொடு என்பது போல் பாக்கியலட்சுமி ராதிகாவை கிழித்து தொங்க விடுகிறார். இது என்னோட வீடு வீட்டை விட்டு பஸ்ட் வெளில போங்க என்பது போல் பேசுகிறார்.
கோபி வீட்டிற்கு வந்தவுடன் ராதிகா இது என் வீடு இல்லையா கோபி என கேட்கிறார் உன் வீடு தான் ராதிகா அதுல என்ன பிரச்சனை என கேட்க உடனே பாக்யா சொடக்கு போட்டு இது என் வீடு எனக் கூற உடனே இன்னும் தான் பணம் தரலையே என கோபி பேசுகிறார். இதனால் கோபப்பட்ட பாக்கியா இன்னும் ஒரு மாதத்தில் உங்களுக்கு தர வேண்டிய மொத்த பணத்தையும் தந்திடுவேன் நீங்க உங்க குடும்பத்தை கூட்டிகிட்டு வெளியே ஓடிடனும் என பேசுகிறார். இத்துடன் இந்த பிரமோ வீடியோ முடிகிறது.